இலங்கை கடந்த 12 மாதங்களில், 6.5பில்லியன் அமெரிக்க டாலரை, வெளிநாட்டுப் பணமாக பெற்றுள்ளது என இலங்கை வங்கி அறிவித்துள்ளது. இவை அனைத்துமே வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்த பணம். அட இத்தனை பில்லியன் அமெரிக்க டாலரா என்று சந்தேகம் இருக்கும். ஆம் அந்த அளவு, சிங்கள மக்கள் மற்றும் தமிழர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து, தமது சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்கள்.
இலங்கை அரசு, றொமேனியா, இத்தாலி, போன்ற பல ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளோடு பேசி, வேலை ஆட்களை அனுப்பி வருகிறது. அந்த வகையில் பல லட்சம் பேர் இலங்கையில் இருந்து சென்று வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் முறைப்படி அனுப்பும் பணம் தாம் இந்த 6.5பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் இதில் சிலர், இன்னும் உண்டியலை பாவித்தே பணத்தை அனுப்பி வருகிறார்கள்.
உண்டியல் செய்பவர்களின் பணம் பிளக்கம் எந்த அளவு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். உண்டியல் செய்பவர்கள் பெரும்பாலும், வைத்திருக்கும் ஆப்-ஷோர் வங்கிக் கணக்கு, நாள் வட்டி கொடுக்கிறது. எனவே நாம் இலங்கைக்கு அனுப்ப கொடுக்கும் பணத்தை அவர்கள் ஒரு நாள் வங்கியில் வைத்திருந்தால் கூட, அதற்கு வட்டி வரும்.
Tags:
world news