இந்திய அரசு எங்களை அழைத்ததால், நாங்கள் சென்னை செல்கிறோம்... என்று.. ஊடகவியலாளருக்கு தெரிவித்து விட்டு. சென்னையில் நடந்த தமிழ் விழா ஒன்றுக்குச் சென்றுள்ளார்கள் தமிழரசுக் கட்சியினர். அங்கே குறைந்த பட்சம் ஸ்டாலினை கூட அவர்களால் சந்திக்க முடியவில்லை. தி.மு.காவில் ஒதுக்கப்பட்ட மக்கள் போல, எங்கே நிற்க்கிறோம் என்று கூட தெரியாமல் அல்லாடும் கனிமொழியை இவர்கள் சந்தித்து. இந்திய மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சி MP சாணக்கியன் கேட்டுள்ளாராம்.
அக்காவும் வழமைபோல சிரித்தபடி, ஓகே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினாராம். உடனே அந்த போட்டோவை எடுத்து பேஸ் புக்கில் அப்டேட் செய்து. தமிழர்களின் இனப் பிரச்சனை ஏதோ முற்றாகத் தீர்ந்து விட்டது போல, கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்கள். இந்த கேடு கெட்ட அரசியலை எங்கே போய் சொல்வது. தமிழர்களை சிங்களவர் ஏமாற்றவில்லை. தமிழர் தான் ஏமாற்றுகிறார்கள். மோடியின் மத்திய அரசு, எப்படா தி.மு.க ஆட்சியை கலைக்கலாம் என்று தருணம் பார்த்து காத்து நிற்கிறது.
இந்த நிலையில் கனிமொழி அக்கா சொன்னால், மோடி கேட்டு விடுவாரா ? தி.மு.கா காங்கிரஸ் கட்சியோடு 20 வருடமாக கை கோர்த்து நிற்கிறது. இந்த லட்சனத்தில் எப்படி தி.மு.க சொல்வதை மத்திய அரசு செவி மடுக்கும் ? இது எல்லாம் காலக் கொடுமை சரவணா ! அமைதிப் படை படத்தில், மணி வண்ணன் பேசும் போது, இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி என்று தான் சொல்லவேண்டும் போல இருகே ?