Axel Rudakubana: சிறைக்கு சென்ற பின்னரும் இந்த மிருகத்தால் பொலிசாருக்கு பெரும் வதை... திகில் சம்பவங்கள்


சவுத்போடில் 3 கொலைகளைச் செய்து , தற்போது 52 வருடம் சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார் Axel Rudakubana என்னும் 18 வயதுடைய நபர்.  இதில் பரபரப்பான விடையம் என்னவென்றால், அவர் சிறைக்கு சென்ற முதல் நாளே அவரை சிறையில் வைத்துக் கொல்ல ஒரு கும்பல் காத்திருந்துள்ளது. 

இதனை கடைசி நிமிடத்தில் அறிந்து கொண்ட பொலிசார் அவரை தனிச் சிறைக்கு மாற்றியுள்ளார்கள். ஆனால் அதிலும் அவரை வைத்திருக்க முடியாத நிலை காணப்படுகிறதாம்.

இதனால் நாளுக்கு நாள் வேறு வேறு அறைகளில் இவரை அடைக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. காரணம் ஏற்கனவே உள்ளே இருக்கும் சில சிறைக் கைதிகளின் உறவினரின் மகளையே இவர் கொலை செய்துள்ளார். 

அது போக, இவரைக் கொன்றுவிட்டால் பணம் கிடைக்கும் என்று கூட சில சக சிறைக் கைதிகள் கருதுகிறார்கள். காரணம் இறந்த 3 பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் செல்வந்தர்களே. இந்த மிருகத்தை பாதுகாப்பதே பெரும் அக்கப் போராக இருக்கும் போல இருக்கே ?

Post a Comment

Previous Post Next Post