மகாராஜ படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீனத் தூதுவர் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் ?

 


பெய்ஜிங்: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகிறது. இதற்கிடையே அந்தத் திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு வேறு எந்த படமும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளதாகச் சீன தூதர் பாராட்டியுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

நடிகர் விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் கடந்த சில ஆண்டுகளாகப் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் சில ஆண்டுகளாகவே விஜய் சேதுபதி மார்க்கெட் சரிவில் இருந்தது.

மகாராஜா:

அந்த நேரத்தில் வெளியான படம் தான் மகாராஜா. நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளியான மகாராஜா தாறுமாறான ஹிட் அடித்தது. கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் வெளியான இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதிக்கு சோலோ ஹீரோவாக ஒரு கம்பேக் படமாகவும் இது அமைந்தது.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவிலும் வெளியானது. அங்கும் இது மிகப் பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப சீனாவிலும் இந்தப் படம் மிகப் பெரியளவில் ஹிட் அடித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு மகாராஜா வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், இப்போது அங்கு ₹100 கோடி கிளப்பில் நுழையப் போகிறது.

சீன தூதர் பாராட்டு:

மேலும், கொரோனாவுக்கு பிறகு சீனாவில் அதிக தொகை வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளதாகச் சொல்லி விஜய் சேதுபதி உள்ளிட்ட படக் குழுவினருக்கு சீன தூதரக அதிகாரி பாராட்டு தெரிவித்தார். மேலும், சீனாவில் மகாராஜாவின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தொடர்பாகவும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மேலும், "கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் அதிக வசூல் செய்த இந்தியப் படமாக மகாராஜா மாறியுள்ளது. மகாராஜா இதுவரை ₹91.55 கோடியை வசூலித்துள்ளது. வெல் டன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியப் படங்கள் சீனாவில் வெளியாவது வழக்கமான நடைமுறைதான். இங்கு ஹிட் அடிக்கும் படங்கள் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும். அமீர் கானின் தங்கல் படம் கூட அப்படிதான் அங்கு மிகப் பெரிய வசூலை வாரிக்குவித்தது. இருப்பினும், கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் இருந்ததால் எந்தவொரு படமும் அங்கு வெளியிடப்படவில்லை.

வசூல் சாதனை:

கடந்த அக். மாதம் இரு தரப்பு உறவுகள் நார்மல் ஆன நிலையில், மீண்டும் படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கே வெளியான முதல் இந்தியா படம் மகாராஜா ஆகும். கடந்த நவ. மாதம் இப்படம் அங்கு ரிலீசான நிலையில், முதல் நாளே அது 13.37 மில்லியன் யுவான், அதாவது இந்திய மதிப்பில் 15.6 கோடியை வசூலித்தது.


சீனத் திரைப்பட விமர்சனத் தளமான டூபனில் மகாராஜா திரைப்படத்திற்கு 10க்கு 8.7 மார்க் வழங்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் வேறு எந்தவொரு இந்தியப் படத்திற்கும் இவ்வளவு மதிப்பெண் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை

தொடர்பு படிவம்