வானில் பறக்கும்.. நீரில் நீந்தும் கார்கள்..! அமெரிக்காவுக்கு சவால் விடும் சீனா!

 


சீனா: சர்வதேச அளவில் சாலைகளில் வாகன நெரிசல் என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், சீனா வானத்தில் பறக்கும், நீரில் நீந்தும் புதிய வகையான வாகனங்ளைக் தயாரித்து அசத்தியுள்ளது.

மழை வெள்ளம் வரும் போது பாலத்தின் மீது கார்களை கொண்டுபோய் நிறுத்தும் சென்னை மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கார் ஒன்றை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்தக் காரை தரையிலும் ஓட்டலாம், தண்ணீரிலும் ஓட்டலாம். அதனால் இதில் எந்தக் கோளாறும் ஏற்படாது.இந்த காரை சீனா தயாரித்துள்ளதால், அமெரிக்க கார் சந்தை லேசாக நடுக்கம் கொண்டுள்ளது.

உலக அளவில் ஆடம்பரமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருவதில் தலைமை தேசமாக அமெரிக்கா இருந்துவருகிறது. எலான் மஸ்க் நிறுவனமான டெஸ்லா தயாரித்து வரும் கார்கள்தான் இன்றைய சந்தை மதிப்பில் உயர்வானதாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவில் உள்ள பணக்காரர்கள் இந்த ஆடம்பரமான காரை வைத்துள்ளதை ஒரு கவுரவமாகக் கருதுகின்றனர்.

இந்நிலையில்தான் சீனா BYD Yangwang U8 என்ற ஆடம்பரமான காரை தயாரித்துள்ளது. இதான் உலகில் நீரில் பயணிக்கும் முதல் கார் என்று கூறப்படுகிறது. காடு, மலை என கரடுமுரடான பாதைகளில் பயணிக்கும் இந்த கார் நீரிலும் பயணிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் விலை 50 ஆயிரம் டாலராகும். இந்த வாகனம் 360 டிகிரியில் சுற்றிச் சுழலக்கூடியது. ஒரே இடத்தில் நிறுத்தி அப்படியே ஒரு வட்டம் போடமுடியும்.

குறைந்தது 1 மீட்டர் ஆழம் கொண்ட நீரில் இந்தக் காரை நீங்கள் இயக்க முடியும். ஒரு நீச்சல் குளத்தில் இறக்கி நீங்க காரில் அமர்ந்தபடியே நீந்தலாம். எவ்வளவு ஆழத்தில் கார் மூழ்கி இருக்கிறது என்பதை ஓட்டுநரின் இருக்கை முன்பாக உள்ள டிஜிட்டல் திரையில் நீங்கள் கணிக்க முடியும்.

அதேபோல் சீனா மனித ஓட்டுநர் இல்லாத மோனோ ரயிலை தயாரித்துள்ளது. இதற்கு Unmanned Aerial Train என்று பெயர். அதாவது இந்த ரயிலானது பாலத்தின் மேலே பயணிக்காது. பாலத்தை அடியில் பற்றிக் கொண்டு தொங்கியபடி ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது. இதன் வேகம் 10.5 கிமீட்டர். அதாவது மணிக்கு 60 கிலோமீட்டரை எளிதாகக் கடந்துவிட முடியும். ஒரே நேரத்தில் 200 பயணிகள் வரை அதில் அமர்ந்து செல்லலாம்.

இந்த ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அமர்ந்துள்ள இருக்கையின் கீழாக நடமாடும் பாதையில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அதன் வழியே தரையில் போவது வருவதைக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காண முடியும். மேலும் எங்கேயும் சாலை நெருக்கடி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு உறுதியாகச் செல்ல முடியும்.

இதுவே அசுரத்தனமான தயாரிப்பு என உலக நாடுகள் வாயைப் பிளந்து நிற்கையில் Ehang 2165 என்ற ஒரு வானில் பறக்கக்கூடிய தனிமனித வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளது. இதைப் பார்க்கும் போது ஒரு பெரிய ட்ரோன் போல் காட்சியளிக்கிறது. காமிராவை தூக்கிப் பறக்கும் ட்ரோன் போல இது மனிதனைத் தூக்கிக் கொண்டு பறக்கிறது.

பெரிய நகரங்களில் இந்த வாகனத்தில் அமர்ந்தபடி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் 2 நபர்கள் பயணிக்கலாம். இதில் எட்டு இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை சுற்றிச் சுழல்வதன் மூலம் வானில் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குப் பறக்கலாம். ஆம்புலன்ஸ் போன்ற அவசர தேவைக்கு இதைப் பயன்படுத்த முடியும். இதன் வேகம் மணிக்கு எவ்வளவு தெரியுமா? 130 கிமீட்டர். சுமார் தரையிலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்க முடியும்.

அடுத்து Ridroid Canguro என்ற வாகனம். இதை வைத்து மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், காம்ப்ளக்ஸ், அடுக்குமாடிக் குடியிருப்பு என அப்படியே உள்ளே பயணம் செய்யலாம். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்ல இதைப் பயன்படுத்தலாம். தொழிற்சாலைகளில் இதை ஒருவர் ஓடிக் கொண்டு பல அறைகளுக்குப் போய் விரைவாகக் குறிப்பிட்ட நபர்களைச் சந்தித்துவிட்டு தனது அறைக்குத் திரும்ப முடியும். இதனை டோக்கியோ யுனிவர்சிடி உதவியுடன் தயாரித்துள்ளது சீனா. இந்த வரிசையில் Inmotion V14 என்பது இ வைக்கிள் உலகில் ஒரு புரட்சியானது. சாதாரண உருளை போல இருக்கும் இதில் இரண்டு பாதங்களையும் லாக் செய்து கொண்டு நின்று கொண்டே பயணிக்கலாம்.


புதியது பழையவை

தொடர்பு படிவம்