அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மோடியை, டொனால்ட் டிரம்ப் புறக்கணிக்க்கிறாரா? என்ற கேள்வி பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். இதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். இதையடுத்து நாட்டின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அமெரிக்காவை பொறுத்தமட்டில் அதிபர் தேர்தலில் வென்றவுடன் புதிய அதிபர் பொறுப்பேற்க மாட்டார். பிரச்சனையின்றி நிர்வாகம் நடத்துவதற்கு தேவையான வகையில் நியமனங்கள் உள்ளிட்ட பணிகளை செய்வார்.
அதன்பிறகு 2 மாதங்களுக்கு பிறகு ஜனவரி 20ம் தேதி நாட்டின் அதிபராக பொறுப்பேற்பார். அந்த வகையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இந்த விழாவுக்கு நரேந்திர மோடிக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது ஆச்சரியம் தான்.