அமெரிக்காவின் லாஸ்வெகாசில் கடந்த வாரம் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலின் முன்னால் வெடித்து சிதறிய வாகனத்தை செலுத்திய நபர் அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது என குறிப்பொன்றை எழுதிவைத்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மத்தியு லிவெல்ஸ்பேர்கெர் அமெரிக்கா விழித்துக்கொள்வதற்கா தான் இந்த வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக எழுதியுள்ளார்.
லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்துசிதறிய டிரக் வண்டியின் வாகனச்சாரதி அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிபவர் என விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான கிறீன் பெரெட்டில் பணியாற்றியவர் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேட படைப்பிரிவின் சிரேஸ்ட தரத்தில் உள்ள ஒருவர் ஜேர்மனியில் பணியில் உள்ள இவர் சம்பவம் இடம்பெற்றவேளை விடுமுறையில் இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரணித்த வேளை அவர் விடுப்பிலிருந்தார் என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் எனினும் அவர் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை உயிரிழந்தார் என்பதை தெரிவிக்கவில்லை
டிரம்ப் சர்வதேசஹோட்டலிற்கு வெளியே இடம்பெற்ற வெடிப்புசம்பவத்தின் நோக்கம் குறித்து கண்டறிவதற்காக அதிகாரிகள் மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் இலத்திரனியல் சாதனங்களை தொடர்ந்தும் ஆராய்ந்துவருகின்றனர்.
மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் ஐபோனில் கண்டெடுக்கப்பட்ட குறிப்புகளில் அவரது தனிப்பட் துயரங்கள் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகள் குறித்த பல விடயங்கள் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'இராணுவத்தில் உள்ள எனது சகாக்கள்முன்னாள் போர்வீரர்கள்மற்றும் அனைத்து அமெரிக்கர்களும் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது . தங்களை வளப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மாத்திரம் செயற்படும் பலவீனமான தகுதியற்றவர்களால் நாங்கள் ஆளப்படுகின்றோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது குறிப்பில் அவர் "நாங்கள் அமெரிக்காவின் மக்கள்உலகில் வாழ்ந்த தலைசிறந்த மக்கள்ஆனால் நாங்கள் தற்போது நோய்வாய்ப்பட்டு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.
"இது ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லைஇது விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்புஅமெரிக்கர்கள் விந்தையான வேடிக்கையான விடயங்கள் குறித்தும் வன்முறைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றார்கள் இதன் காரணமாக இவ்வாறானதொரு சம்பவத்தின் மூலமே எனது செய்தியை தெரிவிக்க முடியும் என கருதினேன் "என அவர் குறிப்பிட்டுள்ளார்.
'நான் ஏன் தனிப்பட்ட முறையில் இதனை செய்தேன்"?நான் இழந்த சகோதரர்கள் பற்றிய என் மனதை நான் தூய்மைப்படுத்தவேண்டும்நான் பலியெடுத்த உயிர்கள் குறித்த வாழ்க்கையின் சுமைகளில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவேண்டும" என அவர் தெரிவித்துள்ளார்.