அனுராவுக்கு இந்தியா கொடுத்த மரியாதையை விட பெரிய வரவேற்ப்பை ஏர்-போட்டில் கொடுக்க இருக்கிறது சீனா !


இலங்கை ஜனாதிபதி அனுரா, 14ம் திகதி சீனாவுக்கு செல்ல உள்ளார். சீன அதிபர் ஷி ஜின்னின், விசேட அழைப்பை ஏற்று அவர் பீஜிங் செல்ல உள்ளார். 14ம் திகதி முதல் 17ம் திகதிரை அனுரா சீனாவில் தங்கி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். 

அனுரா இந்தியா சென்றவேளை, புதுதில்லியில் அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையை விட, பீஜிங்கில் அனுராவுக்கு மிகச் சிறந்த வரவேற்ப்பை கொடுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக, சீனாவில் இயங்கி வரும் South China Morning Post ஊடகமான செய்தி வெளியிட்டுள்ளது.

பீஜிங்கில் அனுரா தங்கி இருக்கும் 3 நாட்களில், பல வணிக ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திடுவார் என்று கூறப்படுகிறது. இலங்கைக்கு சீனா மேலும் பல உதவிகளை செய்ய உள்ள நிலையில். முதல் கட்டமாக கிளீன் ஸ்ரீ லங்கா என்ற, அனுராவின் திட்டத்திற்கு பல உதவிகளை சீனா செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

Post a Comment

Previous Post Next Post