சிங்களப் பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- தொடர் கதை !


அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் நேற்று (22) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post