சுமார் 3 அடி நீள திருப்பாச்சி வாள்களோடு 10க்கும் மேற்பட்ட, ஆபிரிக்க இன இளைஞர்கள் லண்டன் தெருவில் குழு மோதல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை மோதல் என்று சொல்வதை விட, கலகம் என்று சொல்வதே பொருத்தமானது. காரணம் அவர்கள் கைகளில் நீளமான வாள் இருந்ததே தவிர. எவரும் எவரையும் வெட்டவும் இல்லை. கிட்ட நெருங்கவும் இல்லை. ஏதோ சினிமா படங்களில் வருவது போல, ஒருவர் முன்னால் செல்ல மற்றவர் பின்னால் செல்வதும்.
அந்த நபர் திடீரென முன்னால் செல்ல, மற்ற நபர் பின்னால் செல்வது என்று, பதற்றத்தை ஏற்படுத்தி. மக்களை கிலி கொள்ள வைத்துள்ளார்கள். லண்டனில் உள்ள ஹக்னி என்னும் இடத்தில் இந்தச் சம்பவம் நேற்று(06) இடம்பெற்றுள்ளது. இதனால் மக்கள் பீதியில் அங்கும் இங்குமாக ஓடி ஒளிந்துகொண்டார்கள். அவ்வளவு தான். மேட்டர் ஓவர். பொலிசார் இவர்களை வலை வீதி தேடி வருகிறார்கள். கீழே வீடியோ இணைப்பு !