டெலிபோன் ஆன்சர் செய்யும் சாதாரண பெண் ஆனால் பிரித்தானிய அரச குடும்ப இறுதி மரியாதை போல கிடைத்தது எப்படி

சாதாரண ஒரு ஆபீஸ் ரிசெப்ஷன் பெண்மணியின் இறப்பு, ஒரு பிரித்தானிட அரச குடும்ப நிகழ்வு போல மாறியது எப்படி ? உலகின் முன்னணி உதைபந்தாட்ட வீரர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு அவரை, அனுப்பி வைத்த விதத்தைப் பார்த்தால். பிரிட்டன் மக்கள் மிகவும் பெருமைக்கு உரியவர்கள் என்பது புலப்படும். இதுவே ஆசிய நாடுகளாக இருந்தால், ஒரு ஏழையின் இறுதி ஊர்வலமாக இது இருந்து இருக்கும். ஆனால் லண்டனில் நடந்தது என்ன ? வாருங்கள் வாசிக்கலாம் !

மான்செஸ்டர் புட்பால் கிளப் என்றால், உலகத்தில் உள்ள பட்டி தொட்டியில் உள்ளவர்கள் கூட அறிவார்கள். அப்படியான உலகப் புகழ் பெற்ற உதை பந்தாட்ட கழகம் அது. அதன் நிலையத்தில் ரிசெப்ஷனிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார் கேத் பிப்ஸ்(Kath Phipps). உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் அங்கே செல்லும் போது, அவரை கடந்து தான் செல்ல வேண்டி இருக்கும். தனது அன்பான பேச்சால் அவர் அனைவரையும் கவர்ந்து இருந்தார். 

சுமார் அவர் 55 வருடங்களாக அந்த நிலையத்தில் வேலை பார்த்து வந்தாலும், எந்த ஒரு பதவி உயர்வையும் அவர் விரும்பவில்லை. மிகவும் சாதாரணமாக, தொலைபேசி அழைப்பை எடுப்பது, அலுவல வேலைகளை செய்வது,  அலுவலகத்தை கூட்டி சுத்தம் செய்வது என்று தனது அன்றாட வேலையைச் செய்து வந்துள்ளார்.  

அவர் தனது 85வது வயதில் சில தினங்களுக்கு முன்னர் இயற்கை மரணத்தை எய்தினார். அவரது இறுதி நிகழ்வுகள் நேற்று(06) மான்செஸ்டர் கதீரியல் சர்சில் இடம்பெற்றது. ஆனால் அங்கே அனைத்து முன்னணி விளையாட்டு வீரர்களும், பல தொழில் அதிபர்களும், கழகத்திற்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். அதன் முன் நாள் மனேஜரும், மகாராணியிடம் "சர்" பட்டம் வாங்கிய அலெக்ஸ் பேஃர்கசனும் இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார். இதனால் இந்த இறுதி நிகழ்வு, ஒரு உலகப் புகழ் பெற்ற நிகழ்வாக மாறியுள்ளது. 










புதியது பழையவை

தொடர்பு படிவம்