மலேரியா காச்சல் என்று DD சமாளிக்க, அதனை தொடர்ந்து பெரும் பரபரப்பாக இந்த விடையம் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஷால் மனேஜர், டாக்டர் சர்டிபிக்கட் ஒன்றை காட்டி அவருக்கு மலேரியா காச்சல். விரைவில் குணமடைந்து விடுவார் என்று கூறியுள்ளார்.
ஆனால் விஷாலின் நெருங்கிய நண்பர்கள், அனைவரும் விஷால் வீட்டிற்குப் போய் நலம் விசாரித்து வரும் நிலையில். மும்பையில் தங்கி இருந்த ஆர்யா வீடியோவைப் பார்த்து விட்டு உடனே சென்னை வந்து விட்டாராம். அவர் விஷால் வீட்டுக்குப் போய் முதலில் வீட்டில் இருந்து வெளியே வா, ஏன் வீட்டுக்கு உள்ளேயே கிடக்கிறாய் என்று கூறி, விஷாலை வெளியே அழைத்துச் சென்றுவிட்டாராம். அடிக்கடி கதவுகளை மூடி விட்டு விஷால் வீட்டுக்கு உள்ளே தனியாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதனால் தான் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு , மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் விஷால் என்று கருதுகிறாராம் அவரது நெருங்கிய நண்பர் நடிகர் ஆர்யா. தற்போது விஷாலின் பல நண்பர்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளதோடு, அவரை கவனித்தும் வருகிறார்கள். இதனால் விஷால் மீண்டு வருவார் என்று வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தனது உரையாடலில் கூறியுள்ளார்.