அமெரிக்க அதிபர் டொனால் ரம்பின் செல்லப் பிள்ளையாக வலம் வரும், எலான் மஸ்க். அமெரிக்காவை தாண்டி தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது மூக்கை நுளைத்துள்ள காரணத்தாலும். ஜேர்மனியில் நடைபெறவுள்ள தேர்தலில் அவர் ஆழும் கட்சிக்கு எதிராக கருத்துக்களைச் சொல்லி வருவதால், அவர் நடக்கவுள்ள தேர்தலில் தனது X மீடியாவை பாவித்து எதிர் கட்சியை வெற்றியடைய வைக்க கூடும் என்று கருதப்படுகிறது. ஜேர்மனியில் X மீடியாவுக்கு(டிவிட்டருக்கு) 211 மில்லியன் பாவனையாளர்கள் இருக்கிறார்கள்.
இதனால் எலான் மஸ்கின் X மீடியா ஜேர்மனியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் மீடியாவாக உள்ளது. அடுத்த மாதம் ஜேர்மனியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில். ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. எலான் மஸ்கின் X மீடியாவின் அனைத்து செயல்பாடுகளையும் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன், அவதானிக்க வேண்டும் என்றும். பக்கச் சார்பாக நடந்தால், உடனே அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், ஜேர்மனி கோரியுள்ளது.
இதனால் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தற்போது நடவடிக்கையில் இறங்கவுள்ளது. இது நாள் வரை எலான் மஸ்கை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் என்பது, மிக மிக சக்த்தி வாய்ந்த ஒரு அமைப்பு ஆகும். இதற்கு Google தொடக்கம் அனைத்து நிறுவனங்களும் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இல்லையென்றால், ரிவீட்டரை ஐரோப்பாவில் தடைசெய்து விடுவார்கள்.
இதனால் இனி எலான் மஸ்க் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடங்குவாரா எலான் மஸ்க் ? மில்லியன் டாலர் கேள்வி !