கென்யா நாட்டில் உள்ள சிறிய, கிராமம் ஒன்றில் உலோகத்தால் ஆன பெரிய வளையம் ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. 4000KG எடைகொண்ட இந்த இரும்பு வளையம், 8 அடி உயரத்தில் உள்ளது.
இது விமானத்தின் உதிரிப் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும் அதேவேளை. அதில் இருந்து கிடைக்கப்பெற்ற உலோகம் மிகவும் புதுமையாக இருப்பதாக கென்ய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில். அமெரிக்க அதிகாரிகள் சிலர் கென்யாவுக்குச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மேலதிகமாக ஆராயவே அமெரிக்க அதிகாரிகள் சென்றுள்ளார்கள். இது விமானத்தின் பாகம் என்றால், அந்த குறித்த விமானம் ஏன் விபத்திற்கு உள்ளாக வில்லை, அதனை விட எந்த ஒரு பயணிகள் விமானமும், தமது உதிரிப் பாகம் விழுந்துள்ளதாக இதுவரை அறிவிக்கவே இல்லை. இதனால் இது பெரும் சந்தேகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.