அதிக தூரம் சென்று மிக மிகத் துல்லியமாக தாக்க வல்ல, ஸ்னைப்பர் துப்பாக்கிகளை ஜேர்மனி உக்ரைன் ராணுவத்திற்கு வழங்கியுள்ளது. HLR 338 என்று அழைக்கப்படும் இந்த துப்பாக்கியால், சுமார் 1 தொடக்கம் 2 KM க்கு அப்பால் உள்ள இலக்கை கூட குறிவைத்து சுட முடியும் என்கிறார்கள். உக்ரைன் நாட்டின் சில பகுதிகளில், ரஷ்ய ராணுவம் தரை வழியாக இன்னும் ஊடுருவி வருகிறது. இன் நிலையில் இதனைச் சமாளிக்க உக்ரைனுக்கு , இது போன்ற ஆயுதங்கள் தேவை.
மேலும் சொல்லப் போனால் உக்ரைன் ராணுவத்தில், பல குறி சுடும் சிப்பாய்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் சரியான துப்பாக்கிகள் இல்லை. இதனால் தற்போது ஜேர்மனி இந்த ஸ்னைப்பர்களை வழங்கியுள்ளது.
Source : Ukraine has received 420 high-precision HLR 338 sniper rifles in the latest military aid package from Germany. This weapon was officially introduced in 2023, according to the website of the German federal government.