நம்ம தல அஜித்திடம் எந்த இயக்குனர் சென்று கதை சொன்னாலும், அப்படியே கேட்டுக் கொண்டு இருப்பாராம். கதை சொல்லி முடிந்த பிற்பாடு, அந்த இயக்குனரை உள்ளே அழைத்துச் சென்று, Home-Cinemaவில் ஒரு CD போட்டுக் காட்டி. இந்த English படம் போல எடுங்கள் என்று அட்வைஸ் சொல்வது வழக்கமாம்.
சில இயக்குனர்கள் இனி என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு, அது போல தமது கதையை சற்று மாற்றி அமைத்து படத்தை எடுத்து முடிப்பது வழக்கம். ஆனால் விடா முயற்ச்சியை பொறுத்தவரை, இயக்குனர் மகிழ் திருமேனி, பிரேக் டவுன் படத்தை அப்பட்டமாக காப்பி அடித்துவிட்டார். இதனால் தான் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அஜித்தை வைத்து, படம் எடுக்க நியமிக்கப்பட்ட இயக்குனர், விக்னேஷ் சிவன். ஆனால் அவர் சொன்ன கதை தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, அவரை தூக்கும்படி சொன்னதே அஜித். அதனால் தான் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, மகிழ் திருமேனியை போட்டார்கள். ஆனால் அவரோ அப்படியே ஒரு ஆங்கிலப் படத்தை சற்றும் மாற்றாமல் காப்பி அடித்து அதன் காட்சிகளை படமாக்கியுள்ளார். ஐசர்-பைஜான் நாட்டுக்குச் சென்று, அங்கே ஒரு காட்சியை படமாக்கிய வேளை, அதனை மகிழ் திருமேனியின் மனேஜர் மோபைல் போனில் எடுத்து 60 செகண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் தான் சர்சையே ஆரம்பமாகியுள்ளது. இதனைப் பார்த்த அமெரிக்க நிறுவனமான பாரமவுண்ட் என்ற கம்பெனி, தயாரிப்பு நிறுவனத்திடம் 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை Copy Write பணமாக கோரியுள்ளது. இயக்குனர்கள், நடிகர்கள் விடும் பெரும் பிழைகள் இறுதியாக தயாரிப்பு நிறுவத்தையே பாதிக்கிறது. அஜித் தனது சம்பள பணத்தோடு சென்றுவிடுவார், இயக்குனர் தனக்கு என்ன என்பது போல இருந்து விடுவார். இறுதியில் படத்தை வெளியிட முடியாமல் அவஸ்தைப்படுவது தயாரிப்பு நிறுவனங்களே !