இலங்கையில் யூதர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று(08)தெரிவித்தார்.
பௌத்தசாசன அமைச்சகமும் அதன் தொடர்புடைய திணைக்களங்களும் இதற்கான அனுமதியை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார். "இந்த வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் விரைவில் தலையிடுவோம்," என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், "அருகம் குடா சம்பவத்தின் பின்னர், யூதர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் தொடர்பான ஒரு நாட்டின் பொறுப்பாகும்," என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.
சமீபத்தில் புத்த பிக்குகள் இது தொடர்பாக, தமது ஆட்சேபனையை அரசுக்கு வெளியிட்டு இருந்தார்கள். இந்த யூத ஆலயங்கள் தொடர்பாக இலங்கை அரசு தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.