உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க், அமெரிக்காவில் டொனால் ரம்புக்கு ஆதரவு கொடுத்து அவரை வெல்ல வைத்தார். தற்போது பிரிட்டனில் உள்ள லேபர் அரசு மீது பனிப் போர் ஒன்றை ஆரம்பித்து, லேபர் அரசாங்கத்தை பெரும் சங்கடத்தில் விட்டுள்ளார். இதனை அடுத்து தற்போது ஜேர்மனில் ஆட்சியில் இருக்கும், Chancellor Olaf Scholz ரை புத்தியில்லாதவர் என்று கூறி, தாம் எதிர் கட்சிக்கே, ஆதரவு என்று கூறி பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளார்.
இதனால் தற்போது ஆட்சியில் இருக்கும், அதிபர் Chancellor Olaf Scholz பெரும் குழப்பமடைந்துள்ளதோடு. பெரும் அச்சமடைந்து இருப்பதாக நேரடியாகத் தெரிவித்துள்ளார். காரணம் பணம் பாதாளம் வரை பாயும், பதவி வேதாளத்தையே விழுங்கும் என்பார்கள். ஆனால் எலான் மஸ்கிடம் இரண்டுமே உள்ளது. நாம் பதவி என்று கூறுவது, அமெரிக்க அதிபரின் ஆதரவை தான்.
ஜேர்மனியில் அடுத்து நடக்க உள்ள தேர்தலில், எலான் மஸ்கின் ஆதரவு பெற்ற இடது சாரிக் கட்சி வெல்ல வாய்ப்புகள் உள்ளது. தற்போதைய உலக அரசியலில் எலான் மஸ்க் தவிர்க்க முடியாத ஒரு சக்த்தியாக மாறி வருகிறார்.