1400 சிறுமிகளை கற்பழித்த பாக்கிஸ்தான் கேங் மன்னர் சார்ளஸ் மற்றும் பிரதமர் உடந்தையா ?


பிரிட்டனில் சுமார் 1400க்கும் மேற்பட்ட சிறுமிகளை, பலாத்காரம் செய்த பாக்கிஸ்தான் குழு மீது நடவடிக்கை எடுக்க அரசு தவறியுள்ளது. பகிரங்க விசாரணை தேவை என்று கூறினால், இல்லை பொலிசார் ரகசியமாக விசாரிப்பார்கள் என்று பதில் கூறுகிறார் பிரிட்டன் பிரதமர் கியர். இதனால் எலான் மஸ்க் கடும் கோபம் அடைந்து மன்னர் சார்ளஸ் பிரிட்டன் அரசை கலைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில். இது தொடர்பாக மன்னர் சார்ளஸ் , மாளிகை எந்த ஒரு அறிவித்தலையும் விட வில்லை.

இதனால் அடுத்து பிரித்தானிய அரச குடும்பத்தையும், எலான் மஸ்க் தாக்க கூடும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாகக் குதித்தவர் எலான் மஸ்க்.. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்பிற்காக அவர் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார். இதனால் அமெரிக்காவில் ரம் வெற்றியடைந்தார்.  பிரிட்டனின் மான்செஸ்டரில் கிரிமினல் கும்பல் விசாரணைகளை அரசு சரியாகக் கையாளவில்லை என்று விமர்சிக்கும் எலான் மஸ்க், இதற்கு அந்நாட்டின் பிரதமரே காரணம் என்று விமர்சித்துள்ளார்.

சில குறிப்பிட்ட கேங்கை சேர்ந்தவர்கள் நீதியை எதிர்கொள்ளாமல் இளம் பெண்களைச் சுரண்ட அனுமதிக்கப்பட்டபோது இந்த சிபிஎஸ் அமைப்பின் தலைவராக யார் இருந்தார் தெரியுமா? அது (தற்போதைய பிரதமர்) கெய்ர் ஸ்டார்மர் தான். அவர் தான் 2008 ௨013 இதன் தலைவராக இருந்தார். பலாத்கார கும்பல் குறித்து இப்போதும் அவர்கள் விசாரிக்க மறுக்கிறார்கள். ஏனென்றால் இது தொடர்பாக விசாரித்தால் உண்மையான காரணம் வெளியுலகிற்குத் தெரிந்துவிடும். ஆறு வருடங்கள் கிரவுன் ப்ராசிகியூஷன் தலைவராக இருந்தபோது, ​​பிரிட்டனின் பலாத்காரம் நடக்க ஸ்டார்மர் உடந்தையாக இருந்தார். என்றும் எலான் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்