இலங்கை விஞ்ஞான ஆசிரியர் அரங்கேற்றிய அசிங்கம் வகுப்பு மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து

பாடசாலை மாணவியை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் விஞ்ஞான ஆசிரியரை கைது செய்வது தொடர்பில் திவுலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  கம்பஹா, திவுலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயது மாணவி ஒருவரும் அதே பாடசாலையில் கடமையாற்றும் விஞ்ஞான ஆசிரியரும் நீண்ட நாட்களாகக் கையடக்கத் தொலைபேசியில் தொடர்புகளைப் பேணி வந்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரான விஞ்ஞான ஆசிரியர் மாணவியை ஏமாற்றி மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காாணொளிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.மாணவியின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகமடைந்த மாணவியின் உறவினப் பெண் ஒருவர் மாணவியின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டுள்ளார். 

இதன்போது, சந்தேக நபரான விஞ்ஞான ஆசிரியர் மாணவியை ஏமாற்றி மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதை மாணவியின் உறவினப் பெண் அறிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மாணவியின் உறவினப் பெண் இது தொடர்பில் திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். சந்தேக நபரான விஞ்ஞான ஆசிரியரை கைது செய்வது தொடர்பில் திவுலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post