யாழ்ப்பாணத்தில் தமக்கு காணி வேண்டும் என்று சிங்களவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளதாக புதுக் குண்டு ஒன்றைத் தூக்கி நாடாளுமன்றில் போட்டுள்ளார் ஸ்ரீ தரன் MP. அவர் தொடர்ந்து பேசுகையில், 22,000 ஆயிரம் தமிழர்கள், தமது சொந்த இடங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, சிங்களப் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்றும். இதேவேளை அரசு யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களுக்கு காணிகளை எவழங்க உள்ளது என்றும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் வட கிழக்கில் தமிழர்களை ஐதாக்கி, தமிழர்கள் வாழும் பகுதிகளில் மக்களை குடியேற்றி பெரும் கலவை ஒன்றை ஏற்படுத்த அரசு முனைவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் யாழில் வந்து குடியேற ஏன் ஆசைப்படுகிறார்கள் ? யாழ் என்ன டுபாயாக மாறிவிட்டதா ? எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீ தரன் இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லை.
Tags:
Sri Lankan news