டெஸ்லா கம்பெனி மற்றும் X நிறுவனத்தின் உரிமையாளரும், உலகில் முன்னணி செல்வந்தருமான இலோன் மஸ்க், பிரித்தானிய அரசு மீது ஒரு பனிப் போரை ஆரம்பித்துள்ளார்கள். அவர் நேற்று(03) வெளியிட்ட அறிக்கையில், மன்னர் சார்ளஸ் உடனடியாக பிரித்தானிய அரசை கலைக்க வேண்டும் என்றும். புதிய தேர்தல் ஒன்று நடைபெறவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அட அப்படி என்ன தான் இவர்களுக்கு உள்ளே பிரச்சனை ?
அப்படி என்ன மோதல் ?
பிரித்தானியாவின் பெண்கள் மற்றும் சிறார்கள் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர், ஜெஸ் பிலிப்ஸ் என்ற பெண்மணி. ஓல்டஹாம் நகரில் சிறுமிகளை ஒரு பெரும் கும்பல் ஒன்று, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது. இதனை பொலிசார் விசாரித்து சரியான அறிக்கையை வெளியிடவில்லை. இதனால் இந்த விடையத்தில் தலையிட்டு, நேர்மையான விசாரணை ஒன்றை நடத்தவேண்டும் என்று கோரியது. ஆனால் அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ் இதனை நிராகரித்து, விடையங்களை மூடி மறைத்து விட்டார். இதனை அவதானித்த இலோன் மஸ்க் கடும் கோபமடைந்து , அமைச்சரை தாக்கி அறிவித்தல்களை விட்டார்.
ஆனால் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்ரிமர் உடனே உள்ளே புகுந்து, தனது அமைச்சரான ஜெஸ்சை காப்பாற்றி விட்டார். இதனால் பிரதமர் கியர் ஸ்ரிமர் மீதும் இலோன் மஸ்க் கடும் கோபத்தில் உள்ளார். பிரித்தானியாவில் லேபர் கட்சியின், ஆட்சையை எப்படி என்றாலும் கலைக்க வேண்டும் என்று அவர் , முனைப்புக் காட்டி வருகிறார். இருப்பினும் அடுத்து நடக்க உள்ள தேர்தலில் இலோன் மஸ்க் நிச்சயம் கான்சர்வேட்டிவ் கட்சியை ஆதரிப்பார் என்றும், எப்படி அவர் அமெரிக்காவில் ரம்பை ஆதரித்து வெற்றிபெறச் செய்தாரோ அதே போல பிரித்தானியாவிலும் தனது பலம் என்ன என்பதனை அவர் நிச்சயம் காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.
source: Elon Musk claims King should dissolve Parliament in fresh attack on Starmer