உள்ளே புகுந்த உக்ரைன் Drone: வெடித்து சிதறும் ரஷ்யாவின் Military Factory வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு !



உக்ரைன் ரஷ்ய எல்லையில் இருந்து, சுமார் 1,000Kம் தொலைவில் உள்ள Gatchina என்னும் இடத்தில், ரஷ்யாவின் பெரும் ஆயுத உற்பத்தி நிலையம் ஒன்று உள்ளது.  

இதனைக் குறிவைத்த உக்ரைன், ஆளில்லா தற்கொலை விமானத்தை அங்கே அனுப்பி அதனை வெடிக்க வைத்துள்ளது. குறித்த சிறிய விமானம் வெடிக்கக் கூடாத இடத்தில் சென்று வெடித்ததால், உற்பத்தில் நிலையம் முற்றாக அழிந்துள்ளது. இந்த நிலையம் தீ பற்றி எரியும் காட்சிகளை, லோக்கலில் உள்ள ரஷ்யர்கள் வீடியோ பிடித்து இணையத்தில் போட்டுள்ளார்கள். 

ரஷ்யாவின் மிக முக்கிய ராணுவ உற்பத்தி நிலையம் இது. இதனால் ரஷ்யாவுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் ஆளில்லா தாக்குதல் விமானம் எப்படி 1,000KM பறந்தது ? எப்படி ரஷ்ய ராடர்களில் மண்ணைத் தூவியது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கீழே வீடியோ இணைப்பு



புதியது பழையவை

தொடர்பு படிவம்