இங்கிலாந்திடம் GAS பற்றாக்குறை: இந்தக் குளிரில் இதுவேறயா ? பதறும் பொது மக்கள் !


ங்கிலாந்து அரசு பெரும் விடையம் ஒன்றை, மிகவும் கமுக்கமாக கொண்டு சென்று கொண்டு இருக்கிறது. அதாவது வீட்டுக்கு பாவிக்கும் இயற்கை எரிவாயு(LPகேஸ்) பெரும் பற்றாக் குறையில் உள்ளது. இதனால் மின் வெட்டும் சாத்தியம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால்,  மக்கள் அதிகம் கேஸை பாவிக்க ஆரம்பித்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிர் இங்கிலாந்தில் நிலவி வருகிறது.

இதனால் மேலதிகமாக LP கேஸை இங்கிலாந்து அரசு இறக்குமதிசெய்யவேண்டி உள்ளது. பொதுவாக ரஷ்யாவில் இருந்து பைப் வழியாக ஐரோப்பாவுக்கு இந்த கேஸ் கொண்டுவரப்படுகிறது. ஆனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால், ரஷ்யாவின் கேஸை தாம் வாங்க மாட்டோம் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. இதற்கு காரணம் அமெரிக்கா தான். அமெரிக்க அரசு சொல்வதைக் கேட்டு பிரிட்டன் இப்படி ஒரு முடிவை எட்டியது. 

இதற்காக அமெரிக்கா என்ன செய்தது என்றால், கேஸை திரவமாக்கி, அதனை அடைத்து, அமெரிக்காவொல் இருந்து, கண்டேனர்களில் பிரிட்டனுக்கு அனுப்பத் தொடங்கியது. எனவே ரஷ்யாவிடம் இருந்து பெற்ற கேஸுக்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து கேஸை பெற ஆரம்பித்தது பிரிட்டன். இதுவே இவர்கள் செய்த பெரிய தவறு. தற்போது திடீரென கேஸ் தேவை என்றால், அமெரிக்காவில் இருந்து கப்பல் வரும் வரை, காத்திருக்க வேண்டும் என்ற சூழ் நிலை உருவாகியுள்ளது.

இது எப்பொழுதுமே கஷ்டமான விடையம் என்பதனை புரிந்துகொண்ட பிரிட்டன் அரசு, தற்போது புதிதாக கட்டும் எந்த வீட்டுக்கும், கேஸ் இணைப்பு இல்லை என்று அறிவித்து விட்டது. இதனால் மின்சாரத்தில் இயக்கும், வெப்பமாக்கிகளை தான் இனி வீட்டில் பயன்படுத்த வேண்டும். ஆனால் மின்சார விலையோ குறைந்த பாடாக இல்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இன் நிலையில், பிரிட்டனில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இல்லையேல் கேஸ் தட்டுப்பாடு நிலவினால், லட்சக் கணக்கான மக்கள் குளிரில் உறைய வேண்டிய நிலை ஏற்படும். இதனை எப்படி என்றாலும் தவிர்க்க, ஆழும் லேபர் கட்சி பெரும் பாடுபட்டு வருகிறது. பிரிட்டனின் நிலை இந்த அளவு கவலைக்கிடமாகும் என்று எவரும் எண்ணிப் பார்கவில்லை. 

புதியது பழையவை

தொடர்பு படிவம்