கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரியில் துணை காவல் கண்காணிப்பாளராக 50 வயதாகும் ராமசந்திரப்பா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுகிரி காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து டிஎஸ்பி ராமசந்திரப்பாவை கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் என்ன ? வாருங்கள் பார்கலாம் !
டிஎஸ்பி ராமசந்திரப்பாவை மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணை டிஎஸ்பி ராமசந்திரப்பா தன்னுடைய அறையில் இருந்து மற்றொரு அறைக்கு அழைத்து செல்கிறார். அங்கு வைத்து தான் பெண்ணுடன், அவர் நெருக்கமாக இருந்திருக்கிறார். இதனை அப்போது அருகில் இருந்த யாரோ ஜன்னல் வழியாக மறைந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதேபோல் அந்த பெண் யார்.. என்ன நடந்தது என்று கேள்விகள் எழுந்தது. அந்த பெண் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர். நிலப்பிரச்சினை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த பெண் வந்திருக்கிறார். நிலப் பிரச்சனைக்கு வந்த பெண்ணை, மயக்கி பொலிஸ் நிலையத்தில் வைத்தே உல்லாசம் அனுபவித்துள்ளார் இந்த டி.எஸ் பி.