Game Changer Flop போல இருக்கே ? கலவையான விமர்சனங்களை முதல் நாளிலேயே பெற்றுள்ளது


ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், என்று நல்ல படங்களையும் பிரம்மாண்டமான படங்களையும் எடுத்துக்கொண்டு இருந்த, ஷங்கருக்கு என்ன கெட்ட காலமோ தெரியவில்லை. தற்போது அவர் எடுக்கும் இந்தப் படங்கள் சரிவாகவே உள்ளது. போட்ட காசைக் கூட சம்பாதிக்க முடியாமல், தயரிப்பாளர்கள் திணறுகிறார்கள். அதுவும் இந்தியன் 2க்கு பின்னர், ஷங்கர் கிட்ட இப்ப எந்த சரக்கும் இல்லை. அவரிடம் போகவேண்டாம் என்று பலரும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான், தன்னை தூக்கி நிறுத்த கேம் சேஞ்சர் என்ற படத்தை எடுத்தார் ஷங்கர். முதல் நாளே கலவையான விமர்சனங்களை அந்தப் படம் பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி, வெண்ணிலா கிஷோர், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் அரசியல்வாதிக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்கும் நடக்கும் யுத்த களத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தை பார்த்துவிட்ட இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் படத்துக்கு ஓரளவு ஓகே என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதல் காட்சியை பார்த்த சிலர் தமது குறிப்பில் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் படம் பிளாப் என்றால் இனி ஷங்கருக்கு எதிர்காலம் என்பதே கிடையாது என்ற சூழல் உருவாகி விடும். பொறுத்திருந்து தான் பார்கவேண்டும் !

புதியது பழையவை

தொடர்பு படிவம்