லண்டனில் கத்தி மற்றும் வாளோடு அலையும் காவாலிகள் கூட்டம், கடந்த 3 ஆண்டுகளில் முனெப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிசார் தவறி விட்டார்கள் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில். இந்தச் சம்பவம் பெட்ஃபேட்டில் இடம்பெற்றுள்ளது. 8ம் திகதி இரவு பெட்ஃபேட் நகரில், 5 பேர் அடங்கிய குழு, கைகளில் வாள் மற்றும் கத்தியோடு தப்பி ஓடும் காட்சிகள் CCTV ல் பதிவாகியுள்ளது. இவர்கள்..
சற்று தொலைவில் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த 17 வயது மாணவனை கத்தியால் குத்தியுள்ளார்கள். இவர்கள் குறித்த மாணவனை கத்தியால் குத்திய இடம் நெஞ்சு மற்றும் ஈரல் உள்ள பகுதிகள் ஆகும். எனவே திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கில் தான் இவர்கள் குத்தியுள்ளார்கள் என்பது திட்டவட்டமாக பொலிசாருக்கு புரிந்துள்ளது. மேலும் சொல்லப் போனால், இந்த 5 பேர் அடங்கிய குழுவுக்கும் வயது 16 தொடக்கம் 21 க்கு உள்ளே தான் இருக்கும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கத்திக் குத்துக்கு உள்ளான மாணவன் ரத்த வெள்ளத்தில் வீதியில் கிடந்துள்ளான். அவசர சேவைப் பிரிவு அங்கே வந்து முதல் உதவிசெய்தும் கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை. வீதி எங்கும் ரத்த வெள்ளமாக கிடந்தது என்று இதனைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். கீழே வீடியோ இணைப்பு , இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.