அமெரிக்க அதிபராக பதவி ஏற்க்க முன்னரே, டொனால் ரம் பல சர்சைகளை கிளப்பி வருகிறார். டென்மார்க் அரசால் கோரப்பட்டு. அன் நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிரின்லாந்து பிரதேசத்தி, இதனை அமெரிக்கா கைப்பற்றும், என்று ரம் கூறி வருகிறார். மிகப் பெரிய கண்டம் போல உள்ள கிரீன்லாந்தில் வெறும் 56,000 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். அங்கே மக்கள் வசிக்கவே முடியாது. அந்த அளவு பனிப் பாறை பிரதேசம் அது.
அப்படி என்றால் ரம் ஏன் அந்த இடத்தின் மீது கண் வைத்துள்ளார் என்று நினைப்பீர்கள். இந்தப் பனிப் பாறைக்கு கீழே பல வகையான அரிய தாதுக்கள், வைரக் கல், தங்கம் ரத்தினம் மேலும் சொல்லப் போனால் உலோகங்கள் உள்ளது. பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வரும் நிலையில் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரீன்லாந்தை வளைத்துப் போட அமெரிக்க அதிபர் திட்டம் தீட்டி வருகிறார், அப்படி என்றால் ஏன் ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ?
ஆட்டிக் கடலில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கிரீன்லாந்து உள்ளது. இங்கே அமெரிக்கா தனது படைகளை நிலை கொள்ள வைத்தால் ரஷ்யாவுக்கு அது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல். ரஷ்யாவை வெறும் 7 நிமிடங்களில் அமெரிக்காவால் தாக்க முடியும். இதன் காரணத்தால் தான், நிலமையை தாம் உண்ணிப்பாக கவனித்து வருவதாக புட்டின் நேற்றைய தினம்(09) தெரிவித்துள்ளதோடு டொனால் ரம்பை அடக்கி வாசிக்குமாறும் கேட்டுள்ளார் புட்டின்.