பெய்ஜிங்: கொரோனா பரவி கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் HMPV வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கே பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது.. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று அழைக்கும் வகையில்.. வயது குறைவானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதித்து வருகிறது. அதாவது சமீபத்தில் பிறந்த ஜென் ஆல்பா குழந்தைகளை .. இந்த வருடம் முதல் பிறக்கும் ஜென் பீட்டா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவிலும் குழந்தைகளுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த கேஸ் பதிவாகி உள்ளது. பெங்களூரில் முதல் HMPV கேஸ் பதிவாகி உள்ளது. 8 மாத குழந்தை ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 3 மாதம் கொண்ட இன்னொரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில்தான் இரண்டு கேஸ்களும் பதிவாகி உள்ளன.. அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கு இதே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் உள்ளது. குழந்தைகளுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். பல நோய்கள் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதால் அதற்கான எதிர்ப்பு சக்தி இருக்காது. போக போக நோய் ஏற்பட்டு ஏற்பட்டு எதிர்ப்பு சக்தி ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் அவர்களுக்கு எளிதாக நோய் பாதிப்பு ஏற்படுகிறது. HMPV வைரஸ் குழந்தைகளுக்கு பரவவும் இதுவே முக்கிய காரணம்.
HMPV வைரஸின் பின்புலம்: HMPV வைரஸ் என்பது human metapneumovirus ஆகும். HMPV வைரஸ் அங்கே ஏற்கனவே பரவி வரும் influenza A, Mycoplasma pneumoniae மற்றும் லேசான Covid-19 வைரசுக்கு இடையே இந்த HMPV வைரஸ் பரவி வருகிறது. எங்கள் நாட்டிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானது.. இதனால் பாதிப்பு இல்லை என்று சீனா கூறி வருகிறது. ஆனால் கொரோனாவிற்கும் இப்படிப்பதான் சீனா கூறியது.
பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் குணமடைவார்கள், இருப்பினும் கடுமையான நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம். HMPV காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்றாலும் கூட இது ஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்று அச்சுறுத்தல் அல்ல. பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான். இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். HMPV வைரஸ் என்றால் என்ன?: HMPV 2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது. HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த குடும்பத்து வைரசுகள் பொதுவாக சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுவான சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டு இருக்கும். மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.
இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே இணை நோய் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று CDC தெரிவித்துள்ளது.