I am the daddy here Trump latest move: எலான் மஸ்க் வாலை ஒட்ட நறுக்க திட்டம் போட்ட ரம் !


அப்பா... போதுமடா.. சாமி என்று டொனால் ரம் ஒரு முடிவை எட்டி விட்டார் போலத் தோன்றுகிறது என்ற, செய்திகள் பரபரப்பாக வெளியாகி வருகிறது. அது என்னவென்றால் எலான் மஸ்க் பற்றியது தான். கடந்த வருடம் தேர்தல் தினத்தில் இருந்து, அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பார்களோ. அதனை விட பல மடங்கு முக்கியத்துவத்தை எலான் மஸ்கிற்கு கொடுத்து வந்தது ஊடகங்கள். இதனால் தேர்தலில் வென்றாலும் கூட, ஏதோ எலான் மஸ்க் தான் வென்றது போல ஒரு தோற்றப்பட்டு இருந்து வந்தது.

இதனை எலான் மஸ்க் பயன்படுத்திக் கொள்ள தவறவில்லை. அவர் டொனால் ரம்பையே ஓரம் கட்டி விட்டு, தனியான ஒரு பாதையில் செல்ல ஆரம்பித்தார். அத்தோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அரசாங்கம் செய்யவேண்டிய சில முடிவுகளை, அவரே தீர்மானிக்கவும் ஆரம்பித்து விட்டார். இதனைப் பார்த்த டொனால் ரம், விட்டால் பய.. புள்ள என்னையே மிஞ்சி விடுவார் என்று நினைக்கத் தொடங்கி விட்டார் போல.

டொனால் ரம்பை பொறுத்தவரை, காரியம் நடந்தால் அங்கே தான் தான் பிணமாக இருக்க வேண்டும். கல்யாண வீடு நடந்தால் அங்கே தான் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்ற மனப்போக்கை கொண்டவர். அதனை எவரும் தட்டிச் செல்ல விடமாட்டார். இந்த நிலையில் எலான் மஸ்கிற்கு எதிராக போட்டியாக இயங்கிவரும் கம்பெனியான ஓராக்கிள், என்னும் நிறுவனத்தோடு இணைந்து, 500Bபில்லியன் டாலருக்கான ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளார் டொனால் ரம். இது எலான் மஸ்கை பெரும் சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது. 

குறித்த ஓராக்கிள் என்ற கம்பெனி, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு தேவையான பல விடையங்களை இனி செய்து கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க தேர்தலில் தான் உதவியதால் , ரம் வென்றார் என்று சொல்லிக் கொண்டு. அதனை சாட்டாக வைத்துக் கொண்டு மிடுக்கோடு திரிந்த எலான் மஸ்கின் , வாலை,  ஒட்ட நறுக்கியுள்ளார் டொனால் ரம் என்று தான் சொல்லவேண்டும்.

Post a Comment

Previous Post Next Post