பிரபல பின்னனிப் பாடகர் , ஜெயச்சந்திரன் அவர்கள் மறைந்தார். 1965 தொடக்கம் 2015ம் ஆண்டு வரை அவர் பல பாடல்களை பாடியவர். ஒரு சிறந்த பின்னணி பாடகராக இருந்தவர். சிலவேளைகளில் இவர் பாடலைக் கேட்டால், KJ.ஜேசுதாஸ் பாடுவது போலவே இருக்கும். பல நேரங்களில், இவர் பாடிய பாடலை KJ ஜேசுதாஸ் தான் பாடினார் என பலர் நினைப்பது உண்டு.
தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன்... 80 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது பாடல் தொடக்கம் பல்வேறு ஹிட்டான பாடல்களை அவர் தந்துள்ளார். ஒரு வகையில் கேப்படன் விஜய காந்திற்கு பல பாடல்களை பாடி, அவரை புகழில் உச்சிக்கே கொண்டு சென்றவர் இந்தப் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் என்றால் அது மிகையாகாது.