பாலாவின் அவன் இவன் படத்தில் கண்களை மாற்றி நடிக்கும் போது டயலாக் பேப்பர் கையில் வந்தவுடன் ஆட்டோமேட்டிக்காக கண் மாறி விடுமாம் அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிபடுத்தியவர் விஷால். ஆனால் அதுவே பிரச்சனையின் தொடக்கமாக இருந்து தீராத தலைவலியில் கொண்டு போய் விட்டது. இத்துடன் நண்பர்கள் சகவாசம், நடிகர் சங்க பிரச்சனை என எல்லாத்தையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டார்.
அதிக மெண்டல் Stress அதுக்காக அவர் எடுத்த மாத்திரை மற்றும் ஒரு சில கெட்ட பழக்கங்கள் இப்படி உடல் நிலையை உருக்கி விட்டதாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் விசாலுக்கு-கே இந்த நிலைமை. எக்ஸ் காதலி இதுபோன்று கெட்ட பழக்கங்கள் இருக்கும்போது அடித்தே திருத்தி இருக்கிறாராம். தன் காதலியிடம் கேட்காமல் விஷால் மது கூட அருந்துவதில்லை. அப்படி பாதுகாத்து வைத்திருந்த விஷாலை விட்டு சென்றவுடன் பல பிரச்சனைகள் சூழ்ந்து உடல்நிலை மோசமாக மாறிவிட்டது.
அந்த எக்ஸ் காதலிக்கு தற்போது திருமணமும் ஆகிவிட்டது என்பது இன்னும் மன உளைச்சல். பல 100 கோடி சொத்து வைத்திருக்கும் விஷாலின் அப்பா இதை கண்டுக்காமல் இருக்கிறாரா? அவர் மீது உள்ள அக்கறையில் மீண்டும் நல்ல நிலைமைக்கு விஷாலை மாற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.