Jimmy Carter க்கு வரலாறு காணாத பிரியாவிடை 5 அமெரிக்க ஜனாதிபதிகளும் ஒன்றாகக் கூடி மரியாதை !


அமெரிக்க முன் நாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டருக்கு, வரலாறு காணாத பிரியாவிடையை அமெரிக்கா அரசு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் அனைத்து முன் நாள் ஜனாதிபதிகளும் இதில் கலந்துகொண்டார்கள். அமெரிக்காவின் முன் நாள் ஜனாதிபதிகளாக 5 பேர் மட்டுமே தற்போது உள்ளார்கள். இதில் ஜோஜ் புஷ், பில் கிளிங்ரன், பராக் ஒபாமா, டொனால் ரம் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் அடங்குகிறார்கள். அமெரிக்காவை பொறுத்தவரை முன் நாள் ஜனாதிபதி என்ற சொல் பாவிக்கப்படுவதே இல்லை.  (சில முக்கிய புகைப்படங்கள் கீழே உள்ளது)

பதவியை விட்டு விலகினாலும், அவரைக் கண்டால் ஜனாதிபதி என்றே அழைப்பார்கள். மேலும் இறக்கும் வரை அவருக்கான பாதுகாப்பு, ஆட்சியில் உள்ள ஜனாதிபதிக்கான பாதுகாப்புக்கு ஈடாக இருக்கும். மறைந்த ஜிம்மி காட்டருக்கான இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்றவேளை, பெரும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுவரை காணாத அளவு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

எதிரும் புதிருமாக இருக்கும் டொனால் ரம் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் இன்று நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளார்கள். ஒரே இடத்தின் 5 அமெரிக்க ஜானாதிபதிகள் கூடிய விடையம், உலகின் முக்கிய பேசு பொருளாக அமைந்துள்ளது.  






புதியது பழையவை

தொடர்பு படிவம்