உப்புக் கல் இல்லையாம் ..தமிழர்களே ஜாக்கிரதை பல விமான நிலையங்கள் மூடப்பட்டது M5 Motor Wayயில் பாரிய விபத்துகள்


பிரித்தானியாவில் கடந்த 10 வருடங்களுக்குப் பின்னர், இம்முறை பலத்த குளிர் நிலவுகிறது. பல பகுதிகள் முற்றாக உறைந்துள்ள நிலையில். மேலும் சில இடங்களில் மயினஸ் 10 வரை குளிர் சென்றுள்ளதால், வீதிகள் தொடக்கம் விமான நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, பிரித்தானியாவிடம் கையிருப்பில் உப்புக் கல் இல்லையாம். இதனால் முக்கிய வீதிகளில் மட்டுமே உப்புக் கல்லை தூவுகிறது கவுன்சில்.

உள் பாதைகள் மற்றும் முக்கியம் இல்லாத இடங்கள் என அவர்கள் கருதும் இடங்களில் உப்புக் கல்லை லோக்கல் கவுன்சில் தூவ வில்லை. இதனால் பல விபத்துகள் நடக்க ஆரம்பித்துள்ளது. எனவே தமிழர்களே ஜாக்கிரதை. இதனை தவிர M5 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாக மெற்றோ பாலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். எனவே தமிழர்களே ஜாக்கிரதி. 



Post a Comment

Previous Post Next Post