Obama Divorce: மனைவியை விவகாரத்து செய்யும் ஒபாமா..?


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் விவாகரத்து பெற உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவும், மிச்செல் ஒபாமாவும் உலக நாடுகளில் பிரபலமான தம்பதிகளாக உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒபாமாவுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால், டிரம்ப் பதவி ஏற்கும் விழாவில் ஒபாமா மட்டும் பங்கேற்பார் என்றும், மிச்செல் ஒபாமா பங்கேற்பதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஒபாமாவுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மிச்செல் தவிர்த்து வருகிறார். இதற்கு முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் ஒமாபா மட்டுமே பங்கேற்றிருந்தார். அவரது மனைவி மிச்செல் பங்கேற்கவில்லை. தொடர்ந்து பொது இடங்களில் மிச்செல் மற்றும் ஒபாமா ஒன்றாக வெளியே வராததால் அவர்களை சுற்றி பல வதந்திகள் பரவி வருகின்றன. 

இந்நிலையில், பாரக் ஒபாமாவும், மிச்செல் ஒபாமாவும் விவகாரத்து செய்ய உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், இந்த வதந்திக்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருவரும் மவுனமாக உள்ளனர். 1989ம் ஆண்டு சிகாகோவில் உள்ள சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்த மிச்செலை சந்தித்த ஒபாமா 3 ஆண்டுகள் காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post