வம்பயர் SAM ஏவுகணையை கொண்டு ரஷ்யாவின் Kh-59 ஏவுகணையை வீழ்த்திய உக்ரைன் !


உக்ரைன் நாட்டின் கடல் படை , அமெரிக்கா கொடுத்த வம்பயர் சாம் என்னும் ஏவுகணையை பாவித்து, ரஷ்யா ஏவிய Kh-59 என்ற அதி சக்திவாய்ந்த ஏவுகணையை வீழ்த்தியுள்ளார்கள்.   

Kh-59 என்னும் ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை ராடர் கண்களில் மண்ணைத் தூவி விடும் என்றும், ராடர் திரைகளில் அது தெரியாது என்றும் கூறப்பட்டது. இதனால் இதனை ஏவினால் தடுக்க முடியாது என்ற கருத்தும் நிலவி வந்தது.

ஆனால் இவை அனைத்தும் நேற்றோடு(26) உடைந்து போனது. அமெரிக்கா ஆயுத தொழில் நுட்பத்தில் எந்த அளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதனை இது உணர்த்தி நிற்கிறது. வம்பயர் சாம் ஏவுகணை தளத்தை, தனது கடல் படைக் கப்பலில் உக்ரைன் பொருத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

Post a Comment

Previous Post Next Post