சீனா மற்றும் இதர நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்த வகையான ஸ்கூட்டர்கள், மணிக்கு 35 தொடக்கம் 40 மைல் வேகத்தில் செல்ல வல்லவையாக உள்ளது. ஆனால் பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக, இவை மணிக்கு 20 மைல் வேகத்திலேயே செல்ல வேண்டும். இப்படியான வேகமாகச் செல்லக் கூடிய ஸ்கூட்டிகளை ஓட்டி, இதுவரை 29 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தற்போது பிரித்தானிய ஊடகங்கள், அமைச்சர்களுக்கு கடும் அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனை அடுத்து இவ்வாறு சட்டத்திற்கு பிறம்பாக உருவாக்கப்பட்டு பிரிட்டனுக்குள் வரும், இந்த அதிவேக ஸ்கூட்டிகளை தடைசெய்வது தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றம் ஆராய உள்ளது.