சமீப காலமாக உலக அரசியலில் குதித்துள்ளார் எலான் மஸ்க். அவரது X மீடியா என்பது தான், முன்னர் ரிவிட்டராக இருந்தது. இது சகல நாடுகளிலும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால். அதன் உரிமையாளரான எலான் மஸ்க், X மீடியாவை பாவித்து, பல உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருகிறார். பொதுவாக பக்கச் சார்பாக நடக்கும், மீடியாக்களை உலக அளவில் கட்டுப்படுத்துவது அமெரிக்கா தான். ஆனால் இங்கே பார்த்தால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்ல, டொனால் ரம்புக்கு உதவியவரே இந்த எலான் மஸ்க். அதுவும் தனது X மீடியாவைப் பாவித்து.
அதனால் இவரை இனிக் கட்டுப்படுத்த எவரும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதியே என் பையில் தான் என்ற நிலை தோன்றியுள்ளது.
அதாவது தற்போது எலான் மஸ்க் ஒரு கிங் மேக்கராக வலம் வருகிறார். இன் நிலையில் அவர், பிரிட்டன் மன்னர் சார்ளஸ் அன் நாட்டு அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது , பிரிட்டன் பிரதமரோடு பனிப் போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இது போக எலான் மஸ்க், ஜேர்மன் அதிர்பர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தற்போது அவர் பார்வை ஸ்பெயின் நாடு மீது திரும்பியுள்ளது. இதனை உடனே கண்டித்துள்ள ஸ்பெயின் வெளிவிவகார பேச்சாளர், எலான் மஸ்க்கின் X மீடியாக பக்கச் சார்பின்றி இயங்க வேண்டும் என்றும். மேலும் உள்நாட்டு விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடக் கூடாது என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
உலகின் நம்பர் 1 செல்வந்தராக எலான் மஸ்க் வலம் வருகிறார். 425B பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள் அவரிடம் உள்ளது. அவர் நினைத்தால் உலகில் உள்ள பல நாடுகளை விலை கொடுத்து வாங்க முடியும். அந்த அளவு செல்வம் அவரிடம் கொட்டிக் கிடக்கிறது. அதனால் மனுஷன் தலை கால் புரியாமல் ஆடுகிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.