விஜய் LAST DANCE கீழே வீடியோ இணைப்பு
மைதானத்தை அதிரவைக்கும் 85,000 ரசிகர்கள்! இன்று காலை முதலே மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புக்கிட் ஜலீல் மைதானத்தில் குவியத் தொடங்கினர். சுமார் 85,000 பேர் அமரக்கூடிய இந்த மைதானம் தற்போது ரசிகர்களின் "தளபதி... தளபதி..." முழக்கங்களால் அதிர்கிறது. இந்தியாவிற்கு வெளியே ஒரு தமிழ் நடிகருக்கு நடக்கும் மிகப்பெரிய விழா இதுவே ஆகும். இது முன்னர் நடந்தது இல்லை... இனி நடக்கப் போவதும் இல்லை என்று கூறலாம்.
மேடையில் அனிருத்தின் 'ராக்ஸ்டார்' பெர்பார்மன்ஸ்:
இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மேடையில் ஏறியதுமே ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றனர். 'தளபதி கச்சேரி', 'ஒரு பேரே வரலாறு' ஆகிய ஹிட் பாடல்களைத் தொடர்ந்து, நேற்று வெளியான 'செல்ல மகளே' பாடலை அவர் நேரலையில் பாடினார். சுமார் 30-க்கும் மேற்பட்ட பாடகர்கள் பங்கேற்கும் இந்த 10 மணிநேர கலை நிகழ்ச்சி (Thalapathy Thiruvizha), ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய இசை விருந்தாக அமைந்துள்ளது.
திரையுலகப் பிரபலங்களின் சங்கமம்
இந்த விழாவிற்காக இயக்குனர்கள் அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் பிரபுதேவா ஆகியோர் ஏற்கனவே மலேசியா வந்துள்ளனர். 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ள பாபி தியோல், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோரும் மேடையில் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக, விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும், அவரது கடைசிப் படம் இது என்பதாலும் திரையுலகினரிடையே ஒருவித உணர்ச்சிகரமான சூழல் நிலவுகிறது.
விஜய்யின் வருகையும் வைரல் வீடியோக்களும்!
விஜய் மேடைக்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் 'ட்ரெண்டிங்' ஆகி வருகின்றன. நேற்று விமான நிலையத்தில் நடனமாடிய கலைஞர்களுக்காக அவரே ஸ்பீக்கரைத் தூக்கிப் பிடித்த எளிமையான செயல், இன்றும் ரசிகர்களால் சிலாகித்துப் பேசப்படுகிறது. "எனது அன்பான நெஞ்சங்களுக்கு..." என அவர் உரையைத் தொடங்கும் அந்த தருணத்திற்காக ரசிகர்கள் மைதானத்தில் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
