தடுமாறி விழுந்த தளபதி விஜய் : விமான நிலையத்தில் நேர்ந்த விபத்து



மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, இன்று சென்னை திரும்பினார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டனர்.

விஜய் காரை நோக்கி நடந்து வந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் முண்டியடித்ததால் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நிலைதடுமாறிய விஜய், காரின் முன்பகுதியில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். உடனடியாகச் செயல்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Post a Comment

Previous Post Next Post