கீழே வீடியோ இணைப்பு
சென்னையில் இருந்து, மிகப்பெரிய தனியார் விமானம் மூலம் மலேசியா சென்றுள்ள விஜயோடு, அனிருத், நெல்சன், அட்லி என்று பல பிரபலங்களும் கூடவே சென்றுள்ளார்கள். மலேசிய விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், விஜயை வரவேற்க, மலேசியச் சிறுவர்களின் ஸ்டன்ட் உடன் கூடிய நடன நிகழ்வு நடந்தது. அதில் அங்கிருந்த ஸ்பீக்கரை, விஜய் உடனே தூக்கித் தன் கையில் வைத்திருந்தார்.
இதனைப் பார்த்த மலேசியச் சிறுவர்கள், மிகுந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் தமது வரவேற்பைக் கொடுத்தார்கள். மலேசியாவில் தமிழர் அல்லாதவர்கள் கூட, "யார் இந்த விஜய்?" என்று திகைத்துப் போய் நிற்கும் அளவுக்கு அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஒரு வயதான தாய், விஜயை வாழ்த்தினார். "அடுத்த CM நீங்கள் தான், உங்களுக்கு வெற்றி நிச்சயம்" என்று அவர் கூறி, தனது மகனை அணைப்பது போல விஜயை அணைத்த காட்சிகள், பார்ப்போரைக் கண்கலங்க வைத்துள்ளன.
நாளை மலேசியாவே அதிரப்போகிறது. விஜய் அவர்களின் நிகழ்வாக இது இல்லாமல், திரையுலகிற்கு அவர் சொல்லும் பிரியாவிடை நிகழ்வாக இருப்பதால், அனைவரது கண்களிலும் கண்ணீர் தான். எது எப்படியோ, விஜய் அவர்கள் முகத்தில் அந்தக் களை இருக்கவே இல்லை என்று தான் கூறவேண்டும்.
ஏதோ ஒரு கவலையில் அவர் இருந்தாலும், அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் மக்களைப் பார்த்து அவர் சிரித்து வருகிறார் என்று, விமான நிலையத்தில் விஜய்க்கு கைகுலுக்கிய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
