அடுத்த 3 'டார்கெட்' ரஷ்ய கப்பல்களை அமுக்க NATO போடும் மெகா திட்டம் !

NATO war ship

 அட்லாண்டிக் கடலில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் அப்படியே ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படம் போல இருக்கின்றன. ரஷ்யாவின் 'நிழல் படை' (Shadow Fleet) என்று அழைக்கப்படும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) படைகள் குறிவைத்து வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில், 'பெல்லா 1' (Bella 1) என்ற ரஷ்யக் கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் பிரிட்டிஷ் ராணுவம் இணைந்து நடுக்கடலில் சுற்றி வளைத்து அதிரடியாகப் பறிமுதல் செய்தன. இந்தக் கப்பலை விடுவிக்க ரஷ்யா ஒரு நீர்மூழ்கிக் கப்பலையே (Submarine) அனுப்பி மிரட்டல் விடுத்தும், அமெரிக்காவின் 'Seal' கமாண்டோக்கள் வான்வழியாக இறங்கி கப்பலைக் கைப்பற்றியது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இந்தக் கப்பலைத் தொடர்ந்து மேலும் மூன்று ரஷ்ய எண்ணெய் கப்பல்களை (Vesna, Galileo மற்றும் Bertha) நேட்டோ படைகள் தீவிரமாகத் தேடி வருகின்றன. இந்தக் கப்பல்கள் அனைத்தும் சர்வதேசத் தடைகளை மீறி எண்ணெய் கடத்தலில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டிஷ் விமானப்படையின் உளவு விமானங்கள் (RAF Spy Planes) மற்றும் அமெரிக்காவின் போர் கப்பல்கள் இந்த மூன்று கப்பல்களையும் அட்லாண்டிக் கடலில் 'லாக்' செய்து துரத்தி வருகின்றன. இந்தப் பிடியில் இருந்து தப்பிக்க ரஷ்யக் கப்பல்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டும், போலி கொடிகளைப் பயன்படுத்தியும் 'டிமிக்கி' கொடுக்கப் பார்க்கின்றன, ஆனா அமெரிக்கா விடுவதாய் இல்லை!

இந்த அதிரடி வேட்டைக்கு முக்கியக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 'டோட்டல் நேவல் பிளாக்ஹேட்' (Total Naval Blockade) தான். அதாவது, "தடை செய்யப்பட்ட எந்தவொரு கப்பலும் அட்லாண்டிக் கடலைத் தாண்ட முடியாது" என்று அவர் கறாராக உத்தரவிட்டுள்ளார். இதற்குப் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மரும் முழு ஆதரவு கொடுத்துள்ளார். "ரஷ்யாவின் இந்தத் திருட்டுத்தனமான வியாபாரம் உக்ரைன் போருக்குப் பணம் சேர்க்கிறது, இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று பிரிட்டன் ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதனால், அட்லாண்டிக் கடலில் எப்போது வேண்டுமானாலும் ஒரு மிகப்பெரிய ராணுவ மோதல் ஏற்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இன்னொரு பக்கம் ரஷ்யாவோ, "இது சர்வதேச கடல் சட்டங்களுக்கு எதிரானது, அமெரிக்கா கடற் கொள்ளையர்களைப் போலச் செயல்படுகிறது" என்று கொதித்து வருகிறது. ஆனால், அமெரிக்கா இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், அடுத்த மூன்று கப்பல்களையும் வளைத்துப் பிடிக்கத் தயாராகி வருகிறது. இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்களும் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன, ஏனென்றால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு இது ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், அட்லாண்டிக் கடல் இப்போது ஒரு மாபெரும் 'போர்க்களமாக' மாறியுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை!

Post a Comment

Previous Post Next Post