75 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய முடிவு - அதிரும் உலகம் !


அமெரிக்காவுக்கு 'குடியேற' பிளான் பண்ணிட்டு இருந்தவங்களுக்கு ஒரு பெரிய 'shocking news' வந்திருக்கு. சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visa) வழங்கும் 'process'-ஐ அமெரிக்கா காலவரையற்ற காலத்திற்கு 'suspend' செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி உத்தரவு வர்ற 2026, ஜனவரி 21 முதல் அமலுக்கு வருது. இதனால இனிமேல் சட்டபூர்வமா அமெரிக்காவுக்குள்ள நுழையறது ரொம்ப 'tough' ஆகிடும்னு எதிர்பார்க்கப்படுது.

இந்தத் தடைப் பட்டியல்ல நம்ம அண்டை நாடான பாகிஸ்தானும் இடம் பிடிச்சிருக்கு. விசா சிஸ்டத்துல நடக்குற 'abuses' மற்றும் முறைகேடுகளை மொத்தமா முடிவுக்குக் கொண்டு வரத்தான் இந்த 'strict action' எடுக்கப்பட்டதா அமெரிக்க வெளியுறவுத்துறை புதன்கிழமை விளக்கம் கொடுத்திருக்காங்க. முதல்கட்டமா 19 நாடுகளைச் சேர்ந்தவங்களுக்கு புகலிடம் (asylum), குடியுரிமை மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் என எல்லாத்தையும் 'freeze' பண்ணிட்டாங்க.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் 'spokesperson' டாமி பிகாட் பேசும்போது, "அமெரிக்காவுக்குப் பாரமா இருக்கக்கூடியவங்களையும், எங்களோட தாராள மனப்பான்மையை 'misuse' பண்றவங்களையும் 'disqualify' பண்ண எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கு"ன்னு ரொம்ப 'bold'-ஆ சொல்லியிருக்காரு. அதாவது, அமெரிக்காவோட 'public assistance' மற்றும் நலத்திட்டங்களையே முழுசா நம்பி வர்ற வெளிநாட்டினரைத் தடுக்கத்தான் இந்த விசா நிறுத்தம் கொண்டு வரப்பட்டிருக்கு.

சமீப காலத்துல அமெரிக்கா எடுத்த விசா கட்டுப்பாடுகள்லயே இதுதான் ரொம்ப 'extreme' மற்றும் கடுமையான நடவடிக்கையா பார்க்கப்படுது. இதனால வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா போய் செட்டில் ஆகணும்னு கனவு கண்ட பலரோட நிலைமை இப்போ 'question mark' ஆகிடுச்சு. வர்ற வாரங்கள்ல இந்த லிஸ்ட்ல இன்னும் எந்தெந்த நாடுகள் சேரும், இதனால இந்தியாவுக்கு ஏதும் பாதிப்பு இருக்குமாங்கிற 'anxiety' இப்போ எல்லார்கிட்டயும் பரவியிருக்கு.

Post a Comment

Previous Post Next Post