கிரிக்கெட்னாலே நம்ம சுந்தர் பிச்சைக்கு உயிர்! லண்டன் ஸ்பிரிட் டீம் ஓனர்-ஆ இருக்குற நம்ம ஊரு ஆளு, இப்போ ஐபிஎல் களத்துல ஒரு மிகப்பெரிய 'Master Plan'-ஐ இறக்கியிருக்காரு. போன வருஷம் ChatGPT நிறுவனம் பெண்களுக்கான WPL தொடரோட 16 கோடி ரூபாய்க்கு ஒரு அக்ரிமெண்ட் போட்டு டெக் உலகையே ஆச்சரியப்பட வச்சது. அதுக்கு பதிலடி கொடுக்காம விடுவாரா சுந்தர் பிச்சை? இப்போ ஆண்களுக்கான ஐபிஎல் தொடர்ல, கூகுளோட Gemini AI-ஐ மெயின் ஸ்பான்சரா களமிறக்கி ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்காரு.
Google vs OpenAI மோதல் இப்போ சிலிக்கான் வேலியிலிருந்து நேரா நம்ம ஐபிஎல் ஸ்டேடியத்துக்கு வந்தாச்சு. அடுத்த மூணு வருஷத்துக்கு சுமார் 270 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்டமான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்துல கூகுள் கையெழுத்து போட்டிருக்கிறது இப்போ ஹாட் டாபிக்! ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு AI தளம் பண்ற மிகப்பெரிய இன்வெஸ்ட்மென்ட் இதுதான். கிரிக்கெட் மைதானத்துல இனி சிக்ஸர், விக்கெட் மட்டும் இல்ல, கூகுள் ஜெமினியோட அதிரடியும் பட்டைய கிளப்பப்போகுது.
இது வெறும் விளம்பரம் மட்டும் இல்ல, இந்திய மார்க்கெட்ல இருக்குற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களைத் தன் பக்கம் இழுக்க கூகுள் போட்டிருக்கிற பலமான ஸ்கெட்ச். ஏற்கனவே Canva போன்ற நிறுவனங்கள் பிசிசிஐ-யோட ஷர்ட் ஸ்பான்சர்ஷிப்புக்கு 550 கோடிக்கும் மேல போட்டி போட்டாங்க. அந்த வரிசையில இப்போ டெக் நிறுவனங்கள் ஐபிஎல் விளம்பர ஸ்லாட்டுகளை பிடிக்க கரன்சிகளைக் கொட்ட ரெடியா இருக்காங்க. டிவி மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் இல்லாமலேயே, இந்த AI நிறுவனங்கள் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல செலவு பண்ணப்போறதா ஒரு கணிப்பு இருக்கு.
டெக்னாலஜிக்கும் கிரிக்கெட்டுக்கும் இருக்குற இந்தத் தொடர்பு ஐபிஎல்-ஓட Brand Value-ஐ எங்கேயோ கொண்டு போகப்போகுது. சுந்தர் பிச்சையோட இந்த மூவ் மூலமா, கூகுள் ஜெமினி இனி சாமானிய ரசிகர்களோட போனிலும் மனசிலும் இடம்பிடிக்கும்னு எதிர்பார்க்கப்படுது. சுருக்கமா சொல்லப்போனா, இந்த வருஷம் ஐபிஎல்-ல ரன்களும் பறக்கும், கூடவே கூகுளோட AI பவரும் தெறிக்கும்! இந்த Tech War-ல கடைசில ஜெயிக்கப்போறது யாருன்னு பார்க்க ஒட்டுமொத்த உலகமே வெயிட்டிங்!
