தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை டெல்லி செல்ல உள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. இதுவரை சுமார் 200 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், தனது வாக்குமூலத்தை அளிப்பதற்காக விஜய் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை இரவு அவர் டெல்லியில் தங்கும் சூழலில்.
அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, டெல்லி விமான நிலையத்திலிருந்து விஜய் மீண்டும் சென்னை திரும்பும் வரை, 11 பேர் கொண்ட கமாண்டோ குழுவினர் அவருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவார்கள் என சி.பி.ஐ. உறுதி அளித்துள்ளது.
இந்த கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாகவே, தற்போது கட்சியின் தலைவர் என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விஜய் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால், அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் டெல்லி செல்லும் போது அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சி.பி.ஐ அமைப்பிடம் முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ, விஜய்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துள்ளது. அதன்படி, சுமார் 11 கமாண்டோ வீரர்கள் கொண்ட சிறப்புப் பாதுகாப்புப் படை ஒன்று டெல்லி விமான நிலையத்திலிருந்து விஜய்யை அழைத்துச் செல்லும். நாளை இரவு அவர் டெல்லியில் தங்கும் நேரத்திலும், விசாரணை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் வரை இந்த 11 பேர் கொண்ட குழுவினர் அவருக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் எங்கே போனாலும் செம மாஸ் தான் பாஸ் ...
