ASDA கடையில் கத்தி வாங்கி JD-sport பாக்கில் மறைத்து சென்று மனைவியை கொலை செய்த ஈழத்து நிமலராஜா

 


கடைக்குச்(ASDA) சென்று நல்ல கத்தியாகப் பார்த்து வாங்கி, அதனை  எடுத்துச் சென்று தனது மனைவியைக் குத்திக் கொலை செய்துள்ளார் நிமலராஜா மதியாபரணம். நிலானி என்ற தனது மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்த நிலையில், நிலானியின் குடும்பத்தில் நடந்த ஒரு விழாவிற்குத் தன்னை அழைக்கவில்லை என்ற கோபமே இதற்குக் காரணம் என்று போலீஸ் CID அதிகாரி கூறியுள்ளார். இது போன்றதொரு கொடூரமான கொலையைத் தனது பணிக்காலத்தில் பார்த்ததில்லை என்று CID விவரித்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டான 'ஆஸ்டா' (Asda) சென்று, முகக்கவசம் அணிந்து அவர் கத்தியைத் தேடும் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆஸ்டாவில் வாங்கிய கத்தியால் அவர் தனது மனைவியை எவ்வளவு ஆக்ரோஷமாக குத்தியுள்ளார் என்றால், அந்தக் கத்தியின் முன் பகுதி உடையும் அளவுக்கு அவரது வேகம் இருந்தது என்கிறார் அந்த அதிகாரி. 'ஜேடி ஸ்போர்ட்ஸ்' (JD Sports) பையில் கத்தியை மறைத்து எடுத்துக்கொண்டு, லிவர்பூல் (Liverpool) பகுதியில் உள்ள  Low Cost Food and Wine என்ற கடைக்கு அவர் சென்றுள்ளார்.


20 ஜூன் 2025 அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதன் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது. கடைக்கு வெளியே விஸ்கியைக் குடித்துள்ளார். அந்த விஸ்கியில் அவர் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்துள்ளார். (தற்கொலை செய்ய),  ஏற்கனவே போலீஸார், மனைவியை அவர் பார்க்கவோ அல்லது நெருங்கவோ கூடாது என்று தடை விதித்திருந்தனர்.

நிமலராஜின் மகளான 17 வயதுப் பெண், அந்தக்கடையின் மேல்தளத்தில் உள்ள வீட்டில் சம்பவ நேரத்தில் இருந்துள்ளார். திடீரெனச் சத்தம் கேட்டு கீழே வந்த மகள், தனது அம்மாவின் உடல் கடையின் தரையில் கிடப்பதைப் பார்த்து, பின் கதவால் வெளியேறி போலீஸாரைத் தொடர்பு கொண்டுள்ளார். "எங்கள் அம்மாவின் அன்பு மிகவும் புனிதமானது", "அவர்தான் எங்களது பலம்", "அவரை நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாது". "அவரது ஆன்மா எங்களோடு பயணிக்கும்", "என்றும் எங்கள் அன்பு அம்மா" என்று நிலானியின் மகள்  இறுதிக் கிரிகையின் போது உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அனைவரது கண்களில் இருந்து கண்ணிர் பெருகிறது. 

கடைக்குள் சென்ற நிமலராஜா, அங்கே நின்ற தனது மனைவி நிலானியைக் கத்தியால் பலமுறை குத்தி இரக்கமே இல்லாமல் கொலை செய்துள்ளார். தானும் இறந்துவிடலாம் என்று விஷம் குடித்த நிமலராஜாவைப் போலீஸார் காப்பாற்றிவிட்டனர். ஆனால் அவர் ஒரு கணம் கூட தனது மூன்று பெண் பிள்ளைகளைப் பற்றி நினைக்கவே இல்லை. கடந்த வருடம் இரண்டாவது மகள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால், வீட்டில் ஒரு நிகழ்வை நடத்தியிருந்தார் நிலானி. அதற்குத் தன்னை அழைக்கவில்லை என்றும், அந்த மூன்று மகள்களும்தான் எனது உலகம் என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார் நிமலராஜா.


ஆனால் அம்மா இறந்தால் அந்த மூன்று மகள்களும் அனாதை யாகிவிடுவார்களே என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார். "தன்னைத் தூண்டியதால் இந்தக் கொலையைச் செய்தேன்" என்ற அவரது நியாயத்தை நீதிபதி முற்றாக நிராகரித்தார். குறைந்தபட்சம் 29 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகே பரோல் பற்றி யோசிக்க முடியும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இரண்டு முறை போலீஸாரின் தடையை மீறி, நிமலராஜா தனது மனைவியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். மிகவும் திட்டமிட்டே (Pre-meditated) இந்தக் கொலையை அவர் செய்துள்ளார் என்று நீதிபதி தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே நிமலராஜா மிகவும் கொடூரமானவராக இருந்துள்ளார்; தனது மனைவியைப் பலமுறை தாக்கியுள்ளார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், நிலானி போலீஸார் உதவியோடு நிமலராஜாவைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் துயரம் நடந்துள்ளது. இது நெஞ்சை உருக்கும் ஒரு சோகமான நிகழ்வாகும்.

இறந்து போன நிலானியின் 3 பெண்களும், நன்றாக படித்து அவர் கனவை நிறைவேற்றவேண்டும். குடும்பத்திற்கு ஆறுதல் கிட்ட வேண்டும், மேலும் நிலானி ஆத்மா ஷாந்தியடைய வேண்டும் என்று அதிர்வு இணையம் சார்பாக நாமும் பிரார்த்திக்கிறோம். 

அதிர்வுக்காக,

கண்ணன்

Post a Comment

Previous Post Next Post