7.30யில் மாட்டிய ஈழத்து பாடகர் வாகீசன்: இதில் BTF செய்த காரியத்தை பாருங்கள் !



 எல்லாமே நம்ம யாழ்ப்பாணம் இணுவில்ல நடந்த அந்தப் பாராட்டு விழாவில்தான் ஆரம்பிச்சது. அந்த மேடையில பேசுன ஒருத்தர், "நம்ம வாகீசன் லண்டன் போய் பிரிட்டிஷ் மகாராணி மாளிகையிலேயே பாடப்போறாரு"ன்னு ஒரு பிட்டைக் கிளப்பிவிட்டாரு. ஆனா உண்மை என்னன்னா, அது மகாராணி மாளிகை இல்ல, பிரிட்டிஷ் பார்லிமென்ட் பில்டிங். இதை உடனே திருத்திச் சொல்லாம வாகீசனும் 'கெத்தா' அப்படியே விட்டுட்டாரு. அங்க ஆரம்பிச்ச அந்தத் தற்பெருமைதான் இப்போ லண்டன்ல வந்து அவரைப் பெரிய பஞ்சாயத்துல சிக்க வச்சிருக்கு.

ஜனவரி 13-ம் தேதி பிரிட்டிஷ் பார்லிமென்ட்ல பொங்கல் விழா நடந்துச்சு. வழக்கமா இந்த மாதிரி மீட்டிங்களுக்கு ஆள் வராதுன்னு 'பிரித்தானிய தமிழர் பேரவை' (BTF) ஒரு குறுக்கு வழியைக் கையாளுவாங்களாம். அதாவது, ஒரு 60 பரதநாட்டிய மாணவிகளைக் கூட்டிட்டு வந்து ஆட விடுறது. அப்புறம் என்ன, அந்தப் புள்ளைங்களோட அப்பா, அம்மா, மாமா, மாமின்னு ஒரு பட்டாளமே வந்து மண்டபம் ஃபுல் ஆகிடும்.

மாலை 5 மணிக்கு பொங்கல் விழா Start ஆகுது என்று அறிவிச்சாங்க. ஆனா..வாகீசனும் 7.30 மணிக்கு லண்டன் பார்லிமென்ட் வாசல்ல போய் நின்னிருக்காரு. ஆனா அங்கிருந்த போலீஸ்காரங்க, "அளவுக்கு அதிகமாக பேர் உள்ள இருக்காங்க, ஒரு எறும்பைக் கூட உள்ள விட முடியாது"ன்னு கறாரா சொல்லிட்டாங்க. "இவர் பெரிய V.I.P-பா, இவருக்காகத்தான் இந்த விழாவே"ன்னு எவ்வளவோ கெஞ்சியும் அந்த வெள்ளைக்கார போலீஸ் அவரை உள்ள விடவே இல்ல.

உள்ள போக முடியாம கடுப்புல வாகீசன் அங்கிருந்து கிளம்பிட்டாரு. ஆனா அப்புறம்தான் அந்த 'ட்விஸ்ட்' நடந்துச்சு.அடுத்த நாள் வாகீசனை வேஷ்டி சட்டையோட வரவழைச்ச BTF அமைப்பு, அங்கிருந்த எம்.பி பாப் பிளாக்மேன் கூட ஒரு போட்டோ எடுத்து, அதை பொங்கல் விழாவில எடுத்தது போல சோஷியல் மீடியால பரப்பி விட்டுட்டாங்க. "அடேய், எங்களையெல்லாம் ஏமாத்துறீங்களா? பொய் போட்டோ போட்டு இதுதான் பொங்கல் விழான்னு ரீல் சுத்துறீங்களே"ன்னு லண்டன்ல இருக்குற ஈழத் தமிழர்கள் இப்போ செமக் கடுப்புல இருக்காங்க. இது சுத்த ஏமாத்து வேலைன்னு எல்லாரும் பேசிட்டு வர்றாங்க.


இது ஒரு பக்கம் இருக்க, Londonல சூப்பர் சிங்கர் மாதுராணி ஒரு செல்ஃபி கேட்டதுக்கு வாகீசன் "நோ" சொன்னதும் இப்போ பெரிய பேசுபொருளாகிடுச்சு. இதையெல்லாம் பார்த்த மக்கள், "இவருக்கு என்ன அவ்ளோ தலைக்கனமா? பெரிய மகாராணி மாளிகையில பாடுற ஆளுன்னு நினைப்போ?"ன்னு கேள்வி எழுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. மொத்தத்துல வாகீசனோட லண்டன் பொங்கல் விழா ஒரு பெரிய 'பிளாப்' ஷோவா முடிஞ்சிருக்கு. இனியாவது தன்னை திருத்திக் கொள்வாரா வாகீசன் ? தெரியவில்லை !

Source : crimedesk.in 

Post a Comment

Previous Post Next Post