வேலைக்காரி, சுனிதா சமையலறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். பின்னால் வந்த ப்ரியா அவளை இறுகக் கட்டிப்பிடித்தாள். மெதுவாகக் கழுத்தில் முத்தமிட்டாள். இவை அனைத்தையும் மோபைல் போனில் பார்த்த கணவர் கிடு நடுங்கிப் போய் விட்டார். அடுத்து நடந்தது என்ன ?
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் வசித்து வந்த ராஜேஷ் - பிரியா தம்பதியின் 7 ஆண்டு கால திருமண வாழ்க்கை, ஒரு திகில் படத்தின் கிளைமாக்ஸ் போல முடிவுக்கு வந்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனைவி பிரியாவுக்கு உதவியாக, சுனிதா என்ற பெண் வேலைக்குச் சேர்ந்தார். ஆரம்பத்தில் எல்லாம் இயல்பாகத் தெரிந்தாலும், நாளடைவில் ராஜேஷுக்குத் தனது வீட்டில் ஏதோ விபரீதம் நடப்பது மட்டும் மெல்லப் புரியத் தொடங்கியது.
ராஜேஷின் சந்தேகத்திற்கு முக்கியக் காரணம், அவர் இரவு உணவு உண்ட 20 நிமிடங்களில் ஏற்படும் அதீத மயக்கம் தான். பகலில் அலுவலகத்தில் சாப்பிடும்போது இல்லாத இந்த மயக்கம், வீட்டில் சாப்பிடும்போது மட்டும் ஏன் ஏற்படுகிறது என அவர் யோசிக்கத் தொடங்கினார். மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றமும், இரவு நேரங்களில் அவர் உணர்வற்றுக் கிடப்பதும் அவரை ஒரு ரகசிய முடிவை எடுக்கத் தூண்டியது. யாரிடமும் சொல்லாமல் சமையலறையில் ஒரு 'ஸ்பை கேமரா'வை (CCTV) பொருத்தினார் ராஜேஷ்.
மறுநாள் அந்த கேமரா பதிவுகளைப் பார்த்த ராஜேஷின் காலடியில் இருந்த பூமி நழுவியது. சமையலறையில் சுனிதா வேலை செய்து கொண்டிருக்க, பின்னால் வந்த பிரியா அவரை இறுகக் கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. வெறும் நட்புக்கும் மேலாக, இருவரும் ஒரு கணவன் - மனைவி போல நெருக்கமாக இருந்ததைக் கண்டு ராஜேஷ் நிலைகுலைந்து போனார். தனது மனைவியின் மற்றொரு முகம் அவருக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
பதிவான காட்சிகளில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், ராஜேஷுக்குக் கொடுக்கப்படும் உணவில் பிரியா ஒரு மர்ம மாத்திரையைக் கலக்கும் காட்சிதான். தன்னைத் தினமும் மயக்க நிலையில் தள்ளிவிட்டு, பிரியா அந்த வேலைக்காரப் பெண்ணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது ராஜேஷுக்குத் தெரியவந்தது. தனது அன்பையும் நம்பிக்கையையும் காற்றில் பறக்கவிட்டு, மனைவி செய்த இந்தத் துரோகத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. விசாரணையில், பிரியாவின் கட்டாயத்தின் பேரிலேயே தான் அவ்வாறு நடந்துகொண்டதாக வேலைக்காரி சுனிதா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விருப்பமில்லாத திருமண உறவும், உண்மையை மறைத்து வாழ்ந்த வாழ்க்கையும் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது. தற்போது ராஜேஷ் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
