தாடியா ? தம்பியா ? தாடிக்காகத் தாலியை அறுத்த வினோத கள்ளக் காதல்

 


உத்தரப் பிரதேசத்தில் 'தாடி' விவகாரம் ஒரு குடும்பத்தையே தலைகீழாக மாற்றியிருக்கிறது. முகமது சாகிர் என்ற இளைஞருக்கும் அர்ஷி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கோலாகலமாகத் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் 'ஸ்மூத்'-ஆகப் போன வாழ்க்கையில் 'தாடி' ரூபத்தில் வில்லன் நுழைந்தார். அர்ஷி தனது கணவரிடம், "இந்தத் தாடி உங்களுக்குச் சுத்தமாக இல்லை, ரொமான்டிக்காகவும் இல்லை... தயவுசெய்து ஷேவ் (Shave) செய்துவிடுங்கள்" என்று அடம் பிடித்துள்ளார். ஆனால், சாகிர் ஒரு மத அறிஞர் (Islamic scholar) என்பதால், தனது நம்பிக்கையின் அடையாளமான தாடியை எடுக்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

வீட்டில் சாகிரின் தம்பி சபீர் வசித்து வந்தார். அண்ணன் தாடியுடன் இருக்க, தம்பியோ 'கிளீன் ஷேவ்' (Clean-shaven) செய்து 'சிக்'கென்று இருந்துள்ளார். சாகிர் வேலைக்குச் சென்ற நேரங்களில், வீட்டில் தம்பி சபீருடன் தனியாக இருந்த அர்ஷிக்கு, காலப்போக்கில் அவர் மீது காதல் மலர்ந்திருக்கிறது. அண்ணனின் தாடியை வெறுத்த அர்ஷி, தம்பியின் 'சுத்தமான' முகத்தில் மயங்கிப்போனார். இந்த ரகசியக் காதல் விவகாரம் சாகிருக்கு அரசல் புரசலாகத் தெரிந்தும், தன் தம்பி இப்படிச் செய்வான் என்று அவர் நம்பவில்லை.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் சாகிருக்கு பேரிடியாக ஒரு சம்பவம் நடந்தது. அர்ஷி தனது துணிமணிகளுடன், கணவரின் தம்பி சபீரோடு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். "என் மனைவி எப்போதாவது மனம் மாறித் திரும்பி வருவாள்" என்று ஒரு மாதம் காத்திருந்த சாகிர், ஏமாற்றமே மிஞ்சியதால் கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் ஏறிவிட்டார். புகாரில் அவர் சொன்ன விஷயம் இன்னும் அதிரடியானது. "என் மனைவியும் தம்பியும் சேர்ந்து என்னை விஷம் வைத்துக் கொல்லத் திட்டம் போட்டார்கள்" என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அர்ஷி தனது காதலன் சபீருடன் திடீரெனத் திரும்பியுள்ளார். ஆனால், அவர் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளார். ஒரு சிறு தாடி விவகாரம், ஒரு குடும்பத்தையே பிரித்து, அண்ணன்-தம்பி உறவில் பகையை மூட்டி, இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post