சிறுமிகள் கற்பழிப்பு சங்க தலைவர் நீங்கள் தான் -FORD தொழிற்சாலையில் டிரம்ப் - ஊழியர் மோதல் VIDEO


அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியாக மிச்சிகனில் உள்ள FORD டிரக் தொழிற்சாலைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஊழியர்கள் இடையே நடந்து சென்றபோது, டி.ஜே. சாபுலா என்ற ஊழியர் திடீரென டிரம்ப்பை நோக்கி "Pedophile Protector" (சிறுமிகள் கற்பழிப்பழிப்பவர்கள்  பாதுகாப்பவர்) என்று உரத்த குரலில் கத்தினார். இந்த எதிர்பாராத விமர்சனத்தைக் கேட்ட டிரம்ப், உடனடியாக அந்த ஊழியரை நோக்கித் தனது நடுவிரலைக் காட்டி (Middle Finger) ஆபாச சைகை செய்ததோடு, கோபமாக அவரைப் சுட்டிக்காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. (கீழே இணைக்கப்பட்டுள்ளது)

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, FORD மோட்டார் நிறுவனம் அந்த ஊழியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளது. "எங்கள் தொழிற்சாலைக்கு வரும் விருந்தினர்களிடம் ஊழியர்கள் கண்ணியமாக நடக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், பணியிடத்தில் இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், ஒரு நாட்டின் அதிபரே பொதுவெளியில் இப்படி ஒரு மோசமான சைகையைச் செய்தது முறையா என்று டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இணையத்தில் போர் நடந்து வருகிறது.

இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் சாபுலா இதற்குப் பதிலளிக்கையில், "நான் உண்மையைச் சொன்னதற்காகத் தண்டிக்கப்படுகிறேன். அமெரிக்காவின் உயரிய பதவியில் இருப்பவர் இப்படி நடந்துகொள்வதுதான் வெட்கக்கேடானது" என்று தெரிவித்துள்ளார். அதேசமயம், டிரம்ப் தரப்பில் இருந்து இது குறித்துப் பேசுகையில், "அதிபர் தனது பாதுகாப்பையும் கௌரவத்தையும் தற்காத்துக் கொண்டார். ஒரு ஊழியர் வரம்பு மீறிப் பேசும்போது அவருக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது" என்று நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் (Unions) மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியரின் பேச்சு சுதந்திரம் மற்றும் நிறுவனத்தின் ஒழுங்குமுறை நடவடிக்கை ஆகியவற்றுக்கு இடையே உள்ள இந்த மோதல், வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஃபோர்டு நிறுவனம் இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவை எடுக்காத நிலையில், அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி ஒரு தரப்பினர் தொழிற்சாலைக்கு வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post